Rasi Palan 22nd January 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 22nd January 2019: எதிர்மறையான எண்ணங்களுக்கு இடமளிக்க வேண்டாம்

Rasi Palan Today 22nd January 2019: எதிர்மறையான எண்ணங்களுக்கு இடமளிக்க வேண்டாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 22nd January 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 22nd January 2019 in Tamil: தீமைகளை அழித்து, நல்லவைகள் என்றும் நிலைநாட்டப்பட அனைவரின் மனதிலும் உறுதி வேண்டும். அந்த உறுதி இறுதியாக இருக்க வேண்டும். எப்பேற்பட்ட சூழலிலும் நெறிதவறாது நடத்தல் என்பது மனித குலத்தில் இருக்க வேண்டிய அடிப்படை தகுதி. தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 22nd January 2019 : இன்றைய ராசி பலன், 22 ஜனவரி 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

Advertisment

அடுத்த சில நாட்கள் உங்களுக்கு கடுமையானதாக இருக்கும். அதற்காக, சோதனைகளை கண்டு அஞ்சி ஓடிவிடக் கூடாது. நண்பர்களின் ஆலோசனை கிடைக்கும். பயன்படுத்திக் கொண்டால், நிச்சயம் உபயோகமே. இந்தக் காலத்தில் உங்களது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது அவசியம்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

இன்னமும் உங்களைச் சுற்றி பிரச்சனைகள் வட்டமிடும். இதனால், உங்கள் மன நிம்மதி கெட்டு, அதனால் உங்களது எதிர்கால திட்டங்கள் கூட பாழாகலாம். அடுத்த வாரத்தில், உங்களுக்கு நிகழ்ந்த அதிசய சம்பவங்களை உட்கார்ந்து மணிக் கணக்கில் பேசலாம். அந்தளவிற்கு சில சங்கடங்கள் காத்திருக்கிறது.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உங்கள் பணிக்கு ஏற்ற பாராட்டுகள் இன்று கிடைக்கும். அது உங்களை மேலும் மகிழ்ச்சியாக்கும். மேலும் பாதுகாப்பாக உணர வைக்கும். உங்களுக்கு கிடைக்கும் மரியாதையால், சில புதிய நட்புகள் உருவாகும். அதனால் உங்களுக்கு சில பயன் உண்டு.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

Advertisment
Advertisements

நீங்கள் கவலையாக காணப்படுவீர்கள். அதற்காக எதிர்மறையான எண்ணங்களுக்கு இடமளிக்க வேண்டாம். தேவையில்லாமல் தலையை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். எது நடக்குமோ அது நிச்சயம் நடக்கும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

எப்பவுமே தீவிரமாக யோசிப்பதால், நிறைய திட்டங்களை கையில் வைத்திருப்பீர்கள். ஆனால், முதலில் எதை அமல்படுத்துவது என்பதில் பெரும் குழப்பம் உங்களிடையே நிலவும். எதுவாக இருந்தாலும், உங்களுக்கென்று தனி நேரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

கிரக நிலை அமைப்புகளால் உங்களுக்கு ஓய்வு நேர சுத்தமாக இருக்காது. அழுத்தமான மனநிலையை உணருவீர்கள். இருப்பினும், உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்வது அவசியம். உங்களது தேவைகளை நீங்கள்தான் நீட்டித்துக் கொள்ள வேண்டும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

காலம் கனிந்து ஏற்படும் மனமாற்றம் உங்களுக்கு நன்மையும் பயக்கும், தீமையும் பயக்கும். பணியிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். எந்த வேலையையும் தள்ளிப்போடாமல் செய்தால் உங்களது வெற்றி ஓரளவிற்காவது உறுதி செய்யப்படும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

அடுத்து சரியாக என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்கும் காலம் இது. உங்கள் குடும்பத்தை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். மகிழ்வார்கள். உங்களது சில நடவடிக்கைகளால் ஏமாற்றங்கள் இருந்தாலும், இறுதியில் வெற்றி கிட்டும் என நம்பலாம்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

நீங்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய மனிதர்களை கடந்து வந்தாலும், உங்கள் வேலை என்ன என்பதை புரிந்து வைத்துக் கொண்டு செயல்படுங்கள். உங்கள் விதி உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்தும், அதனை நீங்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உங்கள் எதிர்கால கனவுகளை நனவாக்க நீங்கள்மிகக் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். தொழில், தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிலும் முன்னேற அதீத உழைப்பு தேவை. சவாலான நாள் இது.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

சற்று மோசமான நாள் இது. உங்கள் நண்பர்களையே சரியாக கணிக்க முடியாமல் ஏமாந்து போவீர்கள். சறுக்கல்களை சந்திப்பீர்கள். ஆகையால், அவர்களை சற்று தூரத்தில் வைத்திருப்பது நல்லது.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

வெளியிடங்களுக்கு செல்லும் வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் நிறைவான மனநிலை நிகழும். பணியிடத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள். மனைவியின் அன்பு அதிகரிக்கும்.

Rasi Palan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: