Advertisment

Rasi Palan 22nd July: அதிக முயற்சிகளை விதைக்க வேண்டிய நாள்... இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 22nd July Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 22nd July: இன்றைய ராசிபலன்

Rasi Palan 22nd July: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 22nd July 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 22nd July 2019: இன்றைய ராசி பலன், ஜூலை 22, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

மிகவும் பிஸியான வாரத்தை துவக்கப் போகிறீர்கள். ஆகையால், பொறுமை இனி வேண்டாம். உங்களுக்காக தனியாக மாற்று ஆட்டக்காரரை தேர்வு செய்ய முடியாது. உங்கள் கோர்ட்டில் நீங்கள் தான் ஆட வேண்டும். உங்களுன் சுய கட்டுப்பாடு உங்களுக்கான சரியான வழியை வெளிச்சமிட்டுக் காட்டும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

மிகப்பெரிய இலக்கு இருக்கும். ஆனால், திட்டமிடலில் சொதப்புவீர்கள். உங்கள் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டாலும் சில சங்கடங்களை அனுபவிக்க நேரிடும். சில உடல் உபாதைகளையும் சந்திப்பீர்கள். பணவிரயம் இருக்கும். நடக்கும் போது கவனமாக நடக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உங்கள் கைகளுக்கு அருகில் வெற்றி வரும் போது, அதை பறிக்காமல் சோம்பேறித்தனம் காட்டிக் கொண்டிருப்பீர்கள் உங்கள் துணையிடம் அன்பை செலுத்தினாலும் அவரிடம் இருந்து சில திட்டுகளையும் வாங்குவீர்கள். தாறுமாறாக செலவு செய்வதை குறைத்துக் கொள்வது உங்களுக்கு தான் நல்லது. பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அல்ல.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

சில சந்தேகங்கள் இருந்தாலும், திடீர் வளர்ச்சி உங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும். உங்களின் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டும் என்று அக்கறை உங்களை விட யாருக்கும் அதிகம் இருக்காது. பெற்றோரிடம், துணையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

உங்கள் பணத்தேவைகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். இதனால், உங்கள் சேமிப்பு பழக்கம் அதிகரிக்கும். பணமும் சேமிப்பாகும். ஆனால், சில தேவையில்லாத வதந்திகளை நம்பி, உங்கள் சேமிப்பை கரைக்க முயற்சிப்பீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளை அவ்வப்போது கேட்பது நல்லது.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

இந்த நாளில் வழக்கத்தை விட அதிகமான சிரத்தை எடுத்து வெற்றிக்காக பயணிக்கலாம். அதிக முயற்சிகளை விதைக்க வேண்டிய நாள். அதேசமயம், தனியாக எதையும் சாதிக்க முடியாது என்பதை உணருவீர்கள். பணவரவு எதிர்பார்த்த அளவு இருக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

சில சமயம், உங்கள் முகத்தை மணலில் மறைத்துக் கொள்ள இயலும். ஆனால், இப்போது அது முடியாது. உங்கள் செயலுக்கு நீங்களே காரணம். நீங்களே பொறுப்பு. சில கடினமான தருணங்களை எதிர்கொள்ள வேண்டிய வாரமும் இது. நாளும் இது.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

இதை கேட்கலாமா வேண்டாமா என்ற யோசித்துக் கொண்டிருந்தால், அப்படியே இருக்க வேண்டியது தான். மறந்தும் முன்னேற்றத்தை வார்த்தைகளில் காண முடியாது. நீங்கள் சொல்வது சிறந்த யோசனையாக இருக்கலாம். ஆனால், அனைவரும் அதை ஒருசேர எதிர்க்கும் போது என்ன செய்வீர்கள்?

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

சில தேவையில்லாத விவாதங்களில் ஈடுபட்டு உங்கள் வேலையை நீங்கள் கெடுப்பதுடன், நேரத்தையும் வீணடிக்கிறீர்கள். மறுப்புகளும், குற்றச்சாட்டுகளும் எழத் தான் செய்யும். அதற்கெல்லாம் வினையாற்றுதல் முட்டாள்த்தனம். விரைவில், உங்களுக்கான பாதையை கண்டறிவீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

வானமே எல்லை. ஆனால், நீங்கள் விரும்பும் களத்தில் கூட ஏன் உங்களால் பெரியளவில் சாதிக்க முடியவில்லை எனில் ஏன் என்பதை யோசிக்க வேண்டும். நீங்கள் எதிர்பார்த்த தருணங்களில் உதவி செய்த நண்பர்கள், எதிர்பார்க்காத தருணத்திலும் உதவி செய்ய முன்வருவார்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

பணத்திற்கும், அதிகாரத்திற்கும் இடையில் சிக்கிக் கொண்டு தவிப்பீர்கள். முடிந்தளவு உங்கள் தனிப்பட்ட விவகாரங்களில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முயற்சி செய்யுங்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

வேண்டாம் என்று ஒதுங்கிச் சென்றாலும், சில சிக்கல்கள் உங்களை துரத்திக் கொண்டிருக்கும். உங்களை அதற்கு மிகவும் பிடித்துவிட்டது போல... எனினும், சில முக்கிய காரியங்களை துவங்கும் முன் கடவுளை வழிப்பட்டு துவங்குங்கள். தேவையில்லாத தலைவலி குறையும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment