Today Rasi Palan, 22nd October 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 22nd October 2019: இன்றைய ராசி பலன், அக்டோபர் 22, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
தொழில்முறை விவகாரங்களில் வார்த்தைகளில் கவனம் அவசியம். எதிர்பாராத விளைவுகளை எதிர்கொள்ள தயாராகுங்கள். மனசஞ்சலத்திற்கு ஆளாவீர்கள் என்பதால் நிதானமாக செயல்படவும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
கிரகங்களின் சாதகமான பார்வையினால் எண்ணிய காரியங்கள் ஈடேறும். மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
மகிழ்ச்சியான நாள். மற்றவர்களை மன்னிப்பீர்கள். பழிவாங்கும் எண்ணங்களிலிருந்து விடுபடுவீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
குடும்ப உறுப்பினர்களின் கோப பார்வைக்கு ஆளாவீர்கள். எதிலும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காததால் மனசஞ்சலம் அடைவீர்கள். வார்த்தைகளில் நிதானம் அவசியம்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
கடந்தகால அனுபவங்களிலிருந்து புதிய பாடம் கற்றுக்கொள்வீர்கள். மற்றவர்களிடமிருந்து உரிய மரியாதை கிடைக்கப்பெறுவீர்கள். எதிர்கால நலனுக்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
நேர்மறையாக இருப்பதன் அவசியத்தை உணர்வீர்கள். பொதுநல நோக்குடன் செயல்படுவீர்கள். வாகன போக்குவரத்தில் நிதானம் அவசியம்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
திட்டமிட்ட காரியங்களில் மாற்றங்களை செய்வீர்கள். நிதிவிவகாரங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். மற்றவர்களுடன் சேர்ந்து செய்யும் தொழில் லாபகரமாக அமையும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
தக்க சமயங்களில் மற்றவர்களின் உதவி, உங்களை மகிழ்விக்கும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
கிரகங்களின் சாதகமான பார்வையினால், எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக செய்துமுடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
வீட்டை சீரமைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மனம்விட்டு பேசுவீர்கள். விருந்து, விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
வீடு மற்றும் சமூகத்தில் நன்மதிப்பு பெறுவீர்கள். இடர்களை அகற்றி எதிர்கால வாழ்விற்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். பழைய நினைவுகளை அசைபோடுவீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
மகிழ்ச்சியான நாள். நிதி விவகாரங்கள் அதிக லாபத்தை தரும், விருந்து, விசேஷங்களில் பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.