scorecardresearch

Rasi Palan 22th August 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 22th August 2020 rasi palan today rasi palan – இன்றைய ராசிபலன்

Rasi Palan 30th september 2020, ராசிபலன்
Rasi Palan 30th september 2020, ராசிபலன்

Today Rasi Palan, 22th August 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 22th August 2020: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 22, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

மகிழ்ச்சியான நாள். பிறர் செய்ய இயலாத காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

ஷாப்பிங் செய்வதில் அதிக நாட்டம் கொள்வீர்கள். இனிய நினைவுகளால் மனம் மகிழ்ச்சி கொள்வீர்கள். உறவுகளால் சங்கடங்கள் நேரிடலாம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். பழைய பிரச்சனைகளை நினைத்து மனம் சோர்வடைவீர்கள். அதிகம் உணர்ச்சிவசப்பட வாய்ப்பு இருப்பதால் நிதானித்து செயல்படுதல் அவசியம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

தவிர்க்கமுடியாத இடர்பாடுகளால் அவதியுறுவீர்கள். அகலக்கால் வைக்காமல் இருப்பது நல்லது. மனஅமைதிக்கு தியானம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

திட்டமிட்ட செயல்களில் மாற்றம் மேற்கொள்வீர்கள். எப்பாடுபட்டாவது எடுத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பங்காளிகள் ஒத்துழைப்பர்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

வார்த்தைகளில் நிதானம் அவசியம். பிறரின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

நிதி விவகாரங்கள் சுத்தலில் விடும் என்பதால் கவனம் தேவை. பணப்பிரச்சினைகள் தீரும். எடுத்த காரியங்களில் பின்னடைவு ஏற்படும் என்பதால் அலட்சியம் தவிர்ப்பீர்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

நிதி விவகாரங்களில் திருப்தி நிலை நிலவும். முக்கிய முடிவுகளை இன்று தவிர்ப்பது நல்லது. மனக்கசப்பு ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனம் அவசியம்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

கிரகங்களின் சாதகமான பார்வையினால், எண்ணிய காரியங்கள் நினைத்தபடி நடக்கும். உடனடி தீர்வுகளை எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே தரும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது நல்லது.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

தவறான முடிவுகளால், தீமை தான் விளையும் என்பதை உணர்வீர்கள். புதிய வரவுகளை எதிர்பார்ப்பீர்கள். கனவு நனவாகும் நாள். நீண்டகாலமாக இழுபறியாக தொடர்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

தொழில்முறையிலான கோரிக்கைகள் நிறைவேற காலதாமதம் ஆகும். விருந்து,விசேஷங்களில் பங்கேற்பீர்கள். கடும் போட்டிகளுக்கு இடையே சிறிது ஓய்வு எடுப்பீர்கள். எதை செய்தால் முன்னுக்கு வரலாம் என்பதை உணர்ந்து அதற்கான செயல்களில் ஈடுபடுவீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

நிதிநிலை விவகாரங்கள் சீராகும். சட்டசிக்கல்கள் ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனம் வேண்டும். லாபமோ நட்டமோ துணிந்து செயல்களில் இறங்குவீர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Horoscope news download Indian Express Tamil App.

Web Title: Rasi palan 22th august 2020