Today Rasi Palan, 22th June 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 22th June 2020: இன்றைய ராசி பலன், ஜூன் 22, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
குடும்பத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயல்வீர்கள். பணியிடங்களில் அதிக உணர்ச்சிவசப்பட வாய்ப்பு உள்ளதால் அமைதி காக்கவும்
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
நேர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும். புதுவித தெம்புடன் காணப்படுவீர்கள். முக்கிய விவகாரங்களில் முடிவு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
கிரகங்களின் சாதகமான பார்வையினால் எண்ணிய காரியங்கள் நினைத்தபடி நடந்தேறும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி காண்பீர்கள். மற்றவர்கள் செய்ய தயங்கும் காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உங்களின் பார்வை விசாலமாகும். எதிர்காலத்திற்காக திட்டங்களை தீட்டுவீர்கள். காலமறிந்து திட்டங்களில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்வீர்கள். அதிக விரயம் ஏற்படும் நாள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
கடினமான நேரமிது. முக்கிய விவகாரங்களில் திட்டமிடுவீர்கள். கனவுகளை நனவாக்க முயற்சி மேற்கொள்வீர்கள். மற்றவர்களிடம் மரியாதையை எதிர்பார்ப்பீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
மிக சிறப்பான நாள். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும், எதிர்காலம் குறித்த பயம் நீங்கும். பணியிடங்களில் நேர்மறை எண்ணத்துடன் இருப்பீர்கள். ரகசியங்களை பாதுகாப்பது நல்லது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
மற்றவர்களுக்காக முக்கிய விவகாரங்களில் பொறுப்புகளை ஏற்பீர்கள். மற்றவர்கள் பாராட்டுவர். தனித்திறமையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
உரிமைகளை சட்டரீதியாக அணுகி போராடி பெறுவீர்கள். பயணம் செல்ல நேரிடலாம். முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு எதிர்காலத்திற்கான திட்டங்களை தீட்டுவீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
அந்தஸ்து உயரும். மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். நிதி விவகாரங்களில் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். அவர்களின் நம்பிக்கைகளுக்கு பாத்திரமாக இருப்பீர்கள். சிலர் உங்களை காயப்படுத்த முயன்றாலும் அதனை கண்டும் காணாது இருப்பீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
உடல் ஆரோக்கியத்தில் போதிய அக்கறை செலுத்துவீர்கள். பிசியாக இருப்பீர்கள். உடற்பயிற்சிகள் செய்து சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
மற்றவர்களுக்காக நேரத்தை செலவிடுவீர்கள். தவிர்க்கமுடியாத நிகழ்வுகளால் அவதிப்படுவீர்கள். இருப்பதை வைத்து சந்தோசம் கொள்வீர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.