Rasi Palan 23rd October 2020: இன்றைய ராசிபலன்: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக்கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 23rd October 2020: இன்றைய ராசி பலன், அக்டோபர் 23, 2020:
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
ஜோதிடர்களுக்கு இரண்டு வகையான காலம் இருக்கிறது. காலத்திற்கு கிரேக்க சொற்களில் பெயரிடப்பட்டுள்ளது. முதலில் Chronos or clock time என்ற முறையில் நாம் காலத்தை அளவிடுகிறோம். அடுத்து காலத்திற்கு Kairos or qualitative time என்ற பயன்பாடு உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நாளின் தன்மையை நமக்கு சொல்கிறது. அந்த நாள் நல்லதா என்பதை திருமணத்திற்காகவோ அல்லது வேலைக்காகவோ சொல்கிறது. நாம் ஜாதகக் கணக்குகளை எழுதும்போது கைரோஸைப் பயன்படுத்துகிறோம்.
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : உங்கள் உறவுகளை அணுசரித்து செல்ல வேண்டிய நாள் இன்று. மற்றவர்கள் நிலையில் இருந்து அவர்களின் நிலைமையை புரிந்து செயல்பட வேண்டியது அவசியம். வாழ்க்கையின் ரகசியங்கள் கண்டு திகைப்படையாதிர்கள். பல்வேறு புதுவித சிக்கல்களுக்கு நீங்கள் தயாராக இருப்பது மிகவும் நல்லது.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : வரும் வாரங்களில் சில காரியங்களில் இருந்து பின்வாங்க முயற்சியுங்கள். ஒரு ஆழமான அமைதி உங்களுக்கு தேவைப்படுகிறது. நாளை வரை இந்த அமைதியை கடைபிடிக்க வேண்டும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) : வேலை செய்யும் சூழல் மாறுவது குறித்து குழப்பம் கொள்கின்றீர்கள். ஆனால், குடும்ப விவகாரங்களில் கவனம் செலுத்தவது முக்கியமான ஒன்றாகும். நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முன்வ வேண்டும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) : பலதரப்பட்ட மக்களுடன் கலந்து பேசுவது நல்ல பலனை தரும். தற்போதைய சூழலில், உங்களுக்குத் தேவையான சிறந்த தீர்வுகளை யார் தருவார்கள் என்பதை கண்டறிவது சிரமம். எனவே, அனைவரிடமும் பேச தொடங்குங்கள்! பேச்சின் மூலம் தான், உங்களோடு சேர்ந்து பயணிக்க விரும்பும் மனிதர்களைக் கண்டறிய முடியும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : சிறிதும் தொடர்பில்லாத சூழ்நிலைகளில் மாட்டித் தவித்து வருகிறோம் என்று நீங்கள் கற்பனை செய்யலாம் என்று சனி கோளுடன் தொடர்புடைய சமீபத்திய நிகழ்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த சிக்கல்களுக்கு முழுக் காரணம் நீங்கள் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அனைத்திற்குமான தீர்வு உங்கள் கைகளில் தான் உள்ளது!
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : உங்கள் தனிப்பட்ட விவகாரங்களில் முக்கிய திருப்புமுனை ஏற்பட இருக்கிறது. உங்களோடு பயணிக்க விரும்பும் மக்களை அடையாளம் காணுங்கள். மனநிலையை சீராக வைத்துக் கொள்ள முயற்சி எடுங்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : வாழ்க்கை மிகவும் சுறுசுறுப்பாக மாறும். நீங்கள் பணிந்து போக வேண்டும், ஒரு தொண்டன் போல் பின்வரவேண்டும் என்று எதிர்பார்ப்பு மற்றவர்களிடம் காணப்படுகிறது. அதிகம், வளைந்து கொடுக்க வேண்டும். உங்கள், அடையாளத்தை பேணி காணுங்கள். இல்லையேல், யாருக்கும் பயனற்று போவீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : குடும்பப் பிரச்சனைகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு, முன்னிரிமை அளிக்கா விட்டால், சூழல் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது. மிகச் சாதாரணமாக இன்பத்திற்கும் நேரம் ஒதுக்குங்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில்,"என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன், உசுரு இருக்கு வேறென்ன வேணும், உல்லாசமா இருப்பேன்" என்ற பாடல் வரிகளை அவ்வபோது நினைவில் கொள்க.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 20) : வீடு மற்றும் தொழில்முறை விவகாரங்கள் குறித்து கேள்விகளுக்கு நல்ல பதில் கிடைக்கும். நீங்கள், சரியான பாதையில் தான் செல்கின்றீர்கள். சிறந்த பதில் வேண்டுமென்றால் நீங்கள் சிறந்த கேள்விகளை எழுப்ப வேண்டும். 'பாட்டும் நானே பாவமும் நானே.... நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே.... என்ற போக்கை கைவிடுங்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) : மனநிலையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட பொருளாதார சிக்கல்களை தீர்க்கும். நீண்ட காலமாக விலகியிருந்த மக்களை ஒன்றிணைக்க முயற்சி எடுப்பீர்கள். கைதட்டல்கள் கிடைக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : சிறந்த வணிக ஒப்பந்தத்தை கையெழுத்திட விரும்பினால், உண்மைகளை நேராக கேட்டுப் பெற வேண்டும். நீங்கள் சில அடிப்படை விவரங்களை கவனிக்காமல், வேகமாய் செல்வதில் அர்த்தமில்லை. வெளிநாடுகளில் வசிக்கும் உங்கள் உறவினர்களுடன் தொடர்பை அதிகரிப்பது நல்லது .
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : சந்திரனின் நேர்கொண்ட பார்வையால் வாழ்க்கையில் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் தொழில்முறை வாழ்க்கை, உங்களுக்கு சாதகமாக உள்ளது. அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!