மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
குடும்பத்தின் மீதான உங்கள் அக்கறை அதிகரிக்கும். உடல் உழைப்பு காரணமாக மனச்சோர்வு ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்யவும். தொழில், வியாபாரம் தொடர்பாக நிறைய பயணங்கள் ஏற்படும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
எதிர்பாராத வகையில் மருத்துவ செலவு உண்டு. உத்யோகத்தில் நல்ல பல சலுகைகள் கிடைக்கும். மாணவர்களின் கல்வித் தரம் மேம்படும். மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நாள் இது.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
நீண்ட காலமாக வெளியில் சுற்றிக் கொண்டிருந்த உங்களது பணம் உங்கள் கைக்கே திரும்பி வரும். குடும்பத்தில் நிலவிய பிரச்சனைகள் விலகும். நண்பர்கள் வகையில் நிறைய உதவி கிடைக்கும். கணவன் – மனைவி உறவில் விரிசல் நீங்கும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
முக்கிய தருணத்தில் பெற்றோரின் அறிவுரையை எடுத்துக்கொள்ளவும். நட்பு வட்டம் விரிவடையும். பணியிடத்தில் உங்கள் கை ஓங்கியே இருக்கும். சரியான திசையில் செல்வீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். செலவுகளை சரியாக திட்டமிட்டு செலவிட வேண்டியது அவசியம். மிக மிக எச்சரிக்கை தேவை.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
வாழ்க்கை தரம் உயர வழி வகைக் கிடைக்கும். விரக்தி மனப்பான்மை பெருமளவில் விலகும். தொழில் ஏற்றம் இருக்கும். பொறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் காணப்படுவீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
கடன் வாங்கும் பழக்கத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நிறைய அனுபவ பாடங்களை கற்பீர்கள். பொறுப்பாக இருக்க வேண்டிய நாள். அனுபவத்தை ரசிக்க வேண்டிய காலக்கட்டம் இது.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
குடும்பத்தில் பொறுமையாக செயல்படுங்கள். பணவரவில் சின்ன சிக்கல் இருக்கும். அத்தியாவசிய தேவைகள் அதிகரிக்க தொடங்கும். பணியிடத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
விட்டு கொடுத்து போவது நல்லது. உங்கள் செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். அதேசமயம், மிக கவனமாக அனைத்தையும் கையாள வேண்டியது அவசியம். கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கடன் விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை. மனமாற்றம் ஏற்படும். காதல் விவகாரம் கைகூடும். நண்பர்களின் ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளலாம்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
சாதுர்யமான பேச்சால் வெற்றியை வசப்படுத்துவீர்கள். உடன்பிறந்தோர் நலனில் அக்கறை கொள்ளவும். பணப்புழக்கம் நல்ல முறையில் இருக்கும். ஆளுமை செய்வீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
பண விரயம் ஏற்படும். இருப்பினும், கையைச் சுடும் அளவிற்கு சறுக்கல் இருக்காது. சமாளிப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். கூட்டுத் தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.