மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
உங்கள் பணிகளை தவிர்த்து, அமைதியாக மற்ற செயல்களில் இருந்து விலகி வெளியே உட்கார்ந்திருக்க வேண்டிய நாள் இது. இந்த வாரம் முழுவதும் நீங்கள் இப்படி அமைதியாக இருந்துவிட்டால் சிறப்பு. நீங்கள் கற்பனை கூட செய்யாத நிகழ்வுகள் அரங்கேறலாம். கவனம் தேவை.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
கடின உழைப்பும், குழப்பமும் சரியான விகிதத்தில் கலந்திருக்கும். சந்திரன் உங்களது மனவலுவை அதிகரிக்கும். சந்திரன் ஆதிக்கம் தருவதால், நீங்கள் தவறாக ஏதும் செய்துவிடாமல் அது பாதுகாக்கும். ஆனால் உண்மைகளை விட நீங்கள் உணர்ச்சிகளால் தூண்டப்படலாம்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
பிரச்சனைகளை தவிர்க்க, அல்லது பிரச்சனையை எதிர்கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உங்களுக்கான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், குறிப்பாக பெரிய வாய்ப்பாக இருப்பின், நீங்களே முடிவு எடுங்கள். யாருக்காகவும் இந்த முடிவுகளை மாற்ற வேண்டாம்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
வாழ்க்கை என்பது கொடுத்து வாங்குவது. நீங்கள் விரும்பும் எல்லாவற்றையும் விட்டு விலகிச் செல்லலாம் என்று கற்பனை செய்து ஏமாற்றாதீர்கள், ஆனால் உங்கள் துணைக்கு என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். மற்றவர்கள் அவர்களின் உடன்பாட்டை உங்களுக்கு வழங்குவார்கள் என்பதை நீங்கள் நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
அனைத்தையும் தவறுதலாக புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். அதேபோல், உங்கள் வார்த்தை உச்சரிப்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வார்த்தைகள மற்றவர்களை தாக்கினால், அவர்களும் அதே சொற்களால் உங்களை காயப்படுத்துவார்கள் என்பதை மறவாதீர்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
உங்கள் தொழில்முறை திட்டங்கள் நிறைவு பெற வேண்டும் என்றால், நீங்கள் நாளை வரையோ அல்லது நாளை மறுதினம் வரையிலோ காத்திருக்க வேண்டியதாக இருக்கலாம். இன்றைய நாள் உங்களது கற்பனை கனவுகளை நிறைவேற்றும் நாளாக இருக்கும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
விசேஷமான பிரிவைச் சேர்ந்த எதற்கும் நிதி உதவி அளிக்க முக்கிய நபர்கள் தயாராக இருப்பார்கள். கோபம் என்பது குறுகிய நேர பைத்தியக்காரத்தனம் என்பதையும் அது உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிடும் என்பதையும் நீங்கள் உணர வேண்டிய நேரம் இது.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
உணர்ச்சிபூர்வமான விஷயங்களைப் பற்றிக் கவலைப்படும்போது நீங்கள் ஆழமாக தோன்றுகிறீர்கள். உற்சாகமான மன நிலை உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் டானிக்காக இருந்து நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். உங்கள் நண்பரின் உதவியை நீங்கள் மிகவும் எதிர்பார்க்கும் நேரத்தில் அவர் கைவிட்டுவிடக் கூடும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து எதிர்பாராத பரிசுகளும் அன்பளிப்புகளும் வரும். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
இன்றைய உலகம் கவிஞர்களையும், கதையாசிரியர்களையும் கற்பனையுடனான அனைவரையும் ஆதரிக்கிறது. ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். நண்பர்களும் நெருக்கமானவர்களும் உதவிக் கரம் நீட்டுவார்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
உங்கள் கனவுகளை நனவாக்க உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், அதற்குமுன்பு உங்கள் கனவுகளை நீங்கள் வடிவமைக்க வேண்டும். இல்லையென்றால், கண்கட்டிய திசையில் செல்வீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
பொருளாதாரத்தை பொறுத்தவரை தூரத்தில் ஒரு ஒளி தெரிகிறது. நம்பிக்கையும், ஆர்வமும் இந்த ஒளியை இப்போது ஏற்படுத்தி உள்ளது. எப்போதும் தேடிக் கொண்டே இருங்கள். ஆனால் உண்மையாக இருங்கள். வதந்தியை நீங்களும் விரும்பலாம். ஆனால், ஒருவருக்கு பின்னால் அதை பேசாதீர்கள்.