Advertisment

Rasi Palan 23rd May: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 23rd May Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 22nd May: இன்றைய ராசிபலன்

Rasi Palan 22nd May: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 23rd May 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 23rd May 2019 : இன்றைய ராசி பலன், மே 23, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்கள் நிலை அடுத்தக்கட்டத்திற்கு நகரும் நாள் இது. விடா முயற்சி உங்களின் பெயரை வேற லெவலுக்கு கொண்டுச் செல்லும். மாசில்லாத தங்கமாக ஜொலிக்கும் உங்களுக்கு ஒரேயொரு சறுக்கல், சோம்பல்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

தெளிவாக காய்களை நகர்த்தி உங்களுக்கு ஆக வேண்டிய காரியத்தை முடிக்கும் திறமை இருப்பதால் தான், மற்றவர்களை நீங்கள் ஆளுமை செய்கிறீர்கள். நண்பர்கள் ஆலோசனை தக்க நேரத்தில் கைக்கொடுக்கும். இருப்பினும், முடிவு எடுப்பதற்காக மட்டும் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

இன்று கொஞ்சம் வசீகரம் அதிகரித்துக் காணப்படுவீர்கள். அதற்கு காரணமும் உங்கள் கிரக நிலைகள் தான். வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி விரைவில் கிட்ட வாய்ப்புள்ளது. திருமண கனவு மேலும் சில காலங்களுக்கு கனவாகவே போகும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

இன்றைய நாள் முழுக்க உங்களைச் சுற்றி பாஸிட்டிவ் வைப் இருப்பதை உணருவீர்கள். நீங்கள் கைவைக்கும் காரியம் துலங்கும். அதுவும் அதிரிபுதிரி ஹிட்டாகும். ஆகையால், சவாலான பணிகளை இப்போதே முடித்துவிட முயற்சி செய்யுங்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மனைவியின் மீதான அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவிய மனக்கசப்புகள் நீங்கும், உற்சாகமாக காணப்படுவீர்கள். மனம் நிறைவாக இருக்கும். மாலை ஏதாவது ஓரு அம்மன் கோவிலில் வழிபடுங்கள். மேலும் மகிழ்ச்சி பொங்கும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

பணி நிமித்தமாக வெளியூருக்கு செல்வீர்கள். ஓய்வில்லாமல் ஓடும் நிமிடங்கள் கொண்ட நாள் இது. விதவிதமாக கனவு காணும் நீங்கள், அதை நிறைவேற்ற முடியாமல் தவிப்பீர்கள். உங்கள் சோதனை காலக்கட்டங்களை இப்போதே அனுபவித்துவிடுங்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

நறுக்கென்று கருத்துகளை சொல்லிவிட்டு தப்பிக்க வழித் தேடிக் கொண்டிருப்பீர்கள். தடாலடியான உங்கள் மூவ்ஸ் மற்றவர்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் அல்லவா. சிந்தித்து செயல்பட முயற்சி செய்யுங்கள். வெற்றிகரமான நாள் இது.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

சரமாரியாக உங்கள் இலக்குகளை மாற்றிக் கொண்டே இருக்காதீர்கள். பாதையை நிர்ணயித்து பயணம் செய்யப் பழகுங்கள். தீர்மானமாய் செயல்பட வேண்டியது முக்கியம் அமைச்சரே. சுமாரான நாள் இது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

சில பல கண்டங்களில் இருந்து இப்போதுதான் நீங்கள் வெளியேறுகிறீர்கள். கடவுள் வழிபாடு தான் இவ்வளவு தூரம் உங்களை பாதுகாப்பாக அழைத்து வந்திருக்கிறது. கொஞ்சம் அசந்தாலும் சறுக்கல் சிரிப்புடன் காத்திருந்த கதை தெரியுமா?

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

காதலுக்கு பச்சைக் கொடி கிடைக்கும். திருமண செய்தியும் விரைவில் காதுகளில் எட்டும். இதற்காக தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? என்பது போன்ற பல சம்பவங்கள் வெற்றிகரமாக இனி அரங்கேறும். தித்திப்பான நாள் இது.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

நீங்கள் அதிகம் நம்பிய விஷயம் உங்கள் காலை வார காத்திருக்கிறது. உஷாராக இருங்கள். உங்கள் கணக்கு வழக்குகளை சரி பார்க்க பழகுங்கள். நேரமின்மை காட்டி நீங்கள் தப்பித்தலாகாது. வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

தனித்துவிடப்பட்ட உங்கள் கதைகளை நீங்களே படித்துக் கொண்டிருக்க வேண்டியது தான். மிங்கிள் ஆக பழகுங்கள். உங்கள் கிரக நிலைக்கு கூட்டு முயற்சியே பயன் தரும். மறந்துவிட வேண்டாம்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment