Rasi Palan Today 23rd November 2018 in Tamil : வாழ்வில் நமது ஒவ்வொரு செயலுக்கும் பின் விளைவுகள் உண்டு. நல்ல செயல்களுக்கு நல்ல விளைவுகள், தீய செயல்களுக்கு தீய விளைவுகள். இதுவே சத்தியம்.
Rasi Palan 23rd November 2018 : இன்றைய ராசி பலன், 23 நவம்பர் 2018
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
பக்தியுடன் காணப்படுவீர்கள். தோல்வி உங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். பக்குவத்துடன் இனி அணுகுவீர்கள். குடும்பத்தினர் மேல் அக்கறை காட்டுவீர்கள். பணியிடத்தில் அமைதியான சூழல் நிலவும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
நீங்கள் கைவைக்கும் எந்த காரியமும் தோல்வி அடையாது. இன்று உங்களுக்கு முழுமையான வெற்றிகளை தரும் நாள். காவல்துறையில் பணி கிடைக்க வாய்ப்புள்ளது. கணினி துறையில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உங்கள் நிதி நிலைமையை சமாளிக்க நல்ல திட்டங்களை உருவாக்குவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். கடல் கடந்து செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அம்பாளை வணங்கி இன்றைய தினத்தை தொடங்குங்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
தலைவனாக இருந்து வழிநடத்துவீர்கள். மற்றவர்களுக்கு ஆணையிடும் பணி கிடைக்க வாய்ப்புள்ளது. நேர்மையாக செயல்படும் உங்களுக்கு நன்மதிப்பு தானாக வந்து சேரும். தேவையில்லாத கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டாம்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
பணத்தை விட்டு எறிந்தால் வேலை நடந்துவிடும் என்று நினைப்பது தவறு. உறவுகளுக்கும், நட்பிற்கும் மரியாதை கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள். உடல் நலத்தில் மேன்மை ஏற்படும். நிம்மதியான நாள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
நீங்கள் இதற்கு முன்பு பார்த்திராத உறவினர்கள் கூட உங்கள் உதவியைத் தேடி வருவார்கள். உங்களது அன்பான அணுகுமுறை எதிரிகளையும் வசப்படுத்தும். பெண்களுக்கு இருந்து வந்த அசௌகரியங்கள் அகலும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
துணிச்சலாக அனைத்து விஷயங்களையும் எதிர்கொண்டு வரும் நீங்கள், உங்கள் சொந்த விஷயத்தில் கோட்டை விடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை பணிய வைப்பார்கள். மாணவர்களின் கல்வித் தரம் உயரும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
கடன் தொல்லைகள் நீங்கும். உண்மையுடன், நேர்மையாக செயல்படுவீர்கள். பணியிடத்தல் செல்வாக்குடன் வலம் வருவீர்கள். அதில் சில இம்சைகளும் உங்களை வலம் வரும். வெற்றிகரமான நாள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
குடும்ப உறவில் மகிழ்ச்சி நீடிக்கும். இதனால், நீண்ட காலம் மனதில் இருந்த ரணம் குறையும். சில ஆச்சர்யமான அதிர்ச்சிகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. அதற்காக அதிகளவு கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. அது உங்களை பேராபத்தில் கொண்டு போய் நிறுத்தும். சரியான நேரத்தில் சரியான வார்த்தைகள் உபயோகப்படுத்த வேண்டிய நாள் இது.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
வேலை உடனடியாக முடிக்க வேண்டும் என்பதற்காக மாற்று வழிகளை தேர்வு செய்வீர்கள். அது நல்லதிலும் போய் முடியலாம், தோல்வியிலும் முடியலாம். பிரச்சனைகளை பேசித் தீர்க்க வேண்டிய நேரமிது.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
புதிய வாழ்க்கைக்கான நல்ல அடித்தளம் போடுவீர்கள். மகிழ்ச்சியான நாள். முன்பு உங்களை உதாசீனம்படுத்தியவர்கள் இப்போது உங்களை ஆராதிப்பார்கள். அதனை நம்ப வேண்டாம். உண்மை எது, பொய் எது என்பதை பிரித்து பழக முயற்சி செய்யுங்கள்.