Advertisment

Rasi Palan 23rd November 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan in Tamil 23rd November 2019: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today rasi palan, rasi palan july 15th, இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan july 15th, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 23rd November 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 23rd November 2019: இன்றைய ராசி பலன், நவம்பர் 23, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

குடும்ப உறவில் மகிழ்ச்சி நீடிக்கும். இதனால், நீண்ட காலம் மனதில் இருந்த பாரம் குறையும். சில ஆச்சர்யமான அதிர்ச்சிகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வீர்கள். பெற்றோர்களின் அன்பைப் பெறுவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

கடன் தொல்லைகள் நீங்கும். உண்மையுடன், நேர்மையாக செயல்படுவீர்கள். பணியிடத்தல் செல்வாக்குடன் வலம் வருவீர்கள். அதில் சில இம்சைகளும் உங்களை வலம் வரும். செலவுகளை குறைப்பது மேலும் நன்மை பயக்கும். வெற்றிகரமான நாள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

துணிச்சலாக அனைத்து விஷயங்களையும் எதிர்கொண்டு வரும் நீங்கள், உங்கள் சொந்த விஷயத்தில் கோட்டை விடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை பணிய வைப்பார்கள். மாணவர்களின் கல்வித் தரம் உயரும். உடன்ல நலத்திலும் உடன் இருப்பவர்கள் நலத்திலும் அக்கறை தேவை.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. அதற்காக அதிகளவு கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. அது உங்களை பேராபத்தில் கொண்டு போய் நிறுத்தும். சரியான நேரத்தில் சரியான வார்த்தைகள் உபயோகப்படுத்த வேண்டிய நாள் இது.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

வேலை உடனடியாக முடிக்க வேண்டும் என்பதற்காக மாற்று வழிகளை தேர்வு செய்வீர்கள். அது நல்லதிலும் போய் முடியலாம், தோல்வியிலும் முடியலாம். பிரச்சனைகளை வலிய இழுத்துப் போட்டுக் கொள்ளாதீர்கள். தலைவலி மிஞ்சும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

புதிய வாழ்க்கைக்கான நல்ல அடித்தளம் போடுவீர்கள். மகிழ்ச்சியான நாள். முன்பு உங்களை உதாசீனம்படுத்தியவர்கள் இப்போது உங்களை ஆராதிப்பார்கள். அதனை நம்ப வேண்டாம். உண்மை எது, பொய் எது என்பதை பிரித்து பழக முயற்சி செய்யுங்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

உங்கள் இலக்கு என்னவென்று தெரியாமலோ அல்லது அதை விட்டுவிட்டோ வேறு திசையில் பயணித்துக் கொண்டு இருப்பீர்கள். இதனால், உங்கள் ஆற்றல் தான் வீணாகும். நண்பர்களின் ஆலோசனைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வீண் பிடிவாதம் வேண்டாம். குறிப்பாக, அந்த ஈகோவை தூக்கி ஒரமாக வையுங்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

கற்றலில் உள்ள சிரமம் அகலும். மாணவர்களுக்கு மகிழ்ச்சியான நாள். அவசர பயணங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. கடன் தொல்லை குறையும். பணியிடத்தில் நல்ல பெயர் அவ்வளவு சீக்கிரத்தில் நல்ல பெயர் கிடைக்காது. மனம் வருந்த வேண்டாம்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்களுக்கான கடைசி வாய்ப்பு இதுதான். தவற விட்டுவிடாதீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை பேசித் தீர்க்க முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியம் சற்று பாதிக்கும். சுமாரான நாள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

எதிர்காலம் குறித்து தீர்க்கமாக யோசிப்பீர்கள். நீண்ட காலத்திற்கு பிறகு, எதிர்காலம் குறித்து தீர்க்கமாக யோசிப்பீர்கள். பெற்றோர்கள் உங்களை நினைத்து நிம்மதி அடைவார்கள். முன்னேற்றமான நாள் இது. ஆனால், செலவு செய்வதில் கவனத்துடன் இருங்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

உங்கள் பாதையை நோக்கி மெதுவாக முன்னேறுவீர்கள். சில செயல்களால் உங்களின் நற்பெயர் பாதிக்கும். ஆனால், அதனை நினைத்து வருந்தத் தேவையில்லை. உங்களின் முடிவில் தெளிவாக இருங்கள். நிச்சயம் வெற்றி உறுதி.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உங்கள் வழியில் புயல் மாதிரி வேகமாக நீங்கள் சென்றுக் கொண்டிருப்பது எல்லாம் ஓகே தான். ஆனால், அதற்காக மற்றவர்கள் சொல்லும், சிறு சிறு ஆலோசனைகளைக் கூட கேட்காமல் இருக்க வேண்டாமே. வெற்றிகரமான நாள்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment