Today Rasi Palan, 23th January 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
Rasi Palan 23th January 2020 : இன்றைய ராசி பலன், ஜனவரி 23, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
Advertisment
Advertisements
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவை தட்டும் என்பதை மறந்துவிடவேண்டாம். நீண்டகால முதலீடுகளில் அதிக கவனம் அவசியம், புதியனவற்றை கற்றுக்கொள்ள விரும்புவீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
உண்மையே எப்போதும் இறுதியானது என்பதை மறந்துவிட வேண்டாம். உங்களின் வார்த்தைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
குடும்பத்தில் பல முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நீங்கள் தற்போது இருக்கும் நிலைக்கும் நேற்று நீங்கள் எடுத்த முடிவுகளே காரணம் என்பதை எந்நேரத்திலும் மறந்துவிட வேண்டாம்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
குடும்ப உறுப்பினர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். ரகசியங்களை பாதுகாக்க அதிக சிரத்தை எடுத்துக்கொள்வீர்கள். உங்களின் நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு ஆச்சர்யமளிக்கும். மகிழ்ச்சியான நாள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
அமைதியான மனநிலை, சந்தோஷமான தருணம் உள்ளிட்டவைகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிரியமானவர்களுடன் நீண்ட தொலைவு பயணம் செல்வீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றாததால், அவர்களின் கோபத்திற்கு ஆளாவீர்கள். சமாதானத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். பெர்சனல் விஷயங்களில் அதிக அக்கறை கொள்வீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
நிதி விவகாரங்களில் அதிக அக்கறை காட்டுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் மும்முரம் காட்டுவீர்கள்.நீண்டகால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
மற்றவர்களின் செயல்களால் மனக்குழப்பம் ஏற்படலாம். பிறர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்த்தால் மனக்கசப்பை தவிர்க்கலாம். மனசஞ்சலத்தால் அவதிப்படுவீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தால் பல பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். வாகன போக்குவரத்தில் கவனம் அவசியம்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
மற்றவர்களின் உள்விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. உணவு பழக்கவழக்கங்களில் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
எந்த காரியத்தையும் ஒன்றுக்கு இரண்டுமுறை செய்ய வேண்டிவரும். நிதிவிவகாரங்களில் அதிருப்தி நிலை நிலவும். நீண்டகால முதலீட்டு திட்டங்களுக்காக வழிவகுப்பீர்கள்.