Rasi Palan 23th June 2020: இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan june 23th, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 23th June 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 23th June 2020: இன்றைய ராசி பலன், ஜூன் 23, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

அதிகம் உணர்ச்சிவசப்பட வாய்ப்பு உள்ளதால் தியானம் உள்ளிட்ட மனஅமைதிக்கான பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.. நீண்டநாட்களாக இழுபறியில் இருந்த விவகாரங்களுக்கு இன்று தீர்வு கிடைக்கும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். உறவுகளிடையே இருந்த பிணக்கு விலகும். மனக்குறைகள் விலகும். பிரியமானவர்களிடம் பொழுதை கழிப்பீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

பணம் உள்ளிட்ட தேவைகள் நிறைவேறும். எல்லாம் நிறைவேறிய பின்னரும் ஏதோ இழந்தது போன்றே உணர்வீர்கள். உங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்துக்கொள்வீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

எதிர்பார்ப்புகள், தேவைகள் நிறைவேறும். சிறிய நகர்விலும் அதிகப்படியான ஆதாயங்களை பார்ப்பீர்கள். எடுத்த காரியங்களை குறித்த நேரத்தில் முடித்து மற்றவர்களின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

கற்பனைகளிலிருந்து விடுபடுவீர்கள். ஒன்றை விட மற்றொன்று எப்போதும் சிறந்ததாகவே இருக்கும் என்பதை உணர்வீர்கள். வார்த்தைகளில் கவனம் வேண்டும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

மனஅழுத்தம் அதிகரிக்கும் நாள். காதலை விட நட்பே சிறந்தது என்பதை உணர்வீர்கள். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது நல்லது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

காதலர்களிடையே, ரகசியங்களை பகிராமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள இயலாமல் கஷ்டப்படுவீர்கள். சந்தேகம் நன்மைக்கே என்பதை உணர்வீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உயர்ந்த விசயங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள். நம்பகத்தன்மை அதிகரிக்கும். பணியிடங்களில் நன்மதிப்பு பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

நிதி விவகாரங்களில் அதிக கவனம் அவசியம். உங்களின் திறமைகளுக்கு மரியாதை கிடைக்கும். மற்றவர்களால் அங்கீகரிக்கப்படுவீர்கள். சிறிய சாதனைகளும் பாராட்டப்படும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

பங்காளிகளுக்கிடையே இருந்த பிணக்கு விலகும். பொதுநலத்தோடு எந்தவொரு விசயத்தையும் அணுகுவீர்கள். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

முதலில் செய்ய வேண்டியவனபற்றி குறிப்பெடுத்து செய்வீர்கள். மற்றவர்களின் நலனுக்காகவும் பாடுபடுவீர்கள். எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனம் அவசியம். அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். சில விசயங்களில் ஏமாற்றமே மிஞ்சும் என்பதால், அதிக கவனம் அவசியம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Horoscope in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Rasi Palan by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close