Advertisment

Rasi Palan 22nd October 2020: இன்றைய ராசிபலன்

உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
Rasi Palan 22nd October 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 2th October 2020: இன்றைய ராசி பலன், அக்டோபர் 23, 2020: 

Rasi Palan 22nd October 2020: இன்றைய ராசிபலன்:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக்கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 22nd October 2020: இன்றைய ராசி பலன், அக்டோபர் 22, 2020: 

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

ஜோதிடர்களுக்கு இரண்டு வகையான காலம் இருக்கிறது. காலத்திற்கு கிரேக்க சொற்களில் பெயரிடப்பட்டுள்ளது. முதலில் Chronos or clock time என்ற முறையில் நாம் காலத்தை அளவிடுகிறோம். அடுத்து காலத்திற்கு Kairos or qualitative time என்ற பயன்பாடு உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நாளின் தன்மையை நமக்கு சொல்கிறது. அந்த நாள் நல்லதா என்பதை திருமணத்திற்காகவோ அல்லது வேலைக்காகவோ சொல்கிறது. நாம் ஜாதகக் கணக்குகளை எழுதும்போது கைரோஸைப் பயன்படுத்துகிறோம்.

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : சுறுசுறுப்பு இன்று மேலோங்கி இருக்கும். புன்னகை மற்றும் மனஅழுத்தமற்ற மனநிலை காரணமாக இறுக்கம்  அகலும். வெற்றி உள்ளங்கையில் வீற்றிருக்கும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21):  தொல்லைகள் வந்தாலும், அதை லாவகமாக அணுகுவதில் வெற்றி காண்பீர்கள். எப்படியாவது மாற்றம் வராதா என அதிகம் மெனக்கடுவீர்கள். குடும்ப உறவுகளோடு கல்ந்து பேச முன்வருவீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21): எதையும் சாதகமான முறையில் சிந்தீபீர்கள். கற்பனைத் திறன் அதிகரிக்கும். நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான புதிய சிந்தனைகள் தோன்றும்.

கடகம் (ஜூன் 22  – ஜூலை  23) : கிரகங்களின் சாதகமான சூழலால் தொல்லைகள் நீங்கி இன்பம் உண்டாகும். வெற்றிக்கான காரணங்கள் புரியும். பெற்றோர்களிடம் மதிப்பு பெறுவீர்கள். ஏகபோக  எண்ணங்களை மாற்றிக் கொண்டால் வாழ்கையில் மேலும் உயர்வு உண்டாகும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :  கணவன், மனைவி இடையே பிரியம்  அதிகரிக்கும். பெற்றோர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பீர்கள். நீண்ட நாள் வேண்டுதல்கள் நிறைவேறும்.   எடுக்கும் முடிவுகள் யாவும்  கனக்கச்சிதமாக இருக்கும். அது உங்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

கன்னி (ஆகஸ்ட் 24  – செப்டம்பர் 23) : இல்லற வாழ்க்கையில் திடீர் இனிப்பு உருவாகும். மாற்றங்களை உணர்வீர்கள். காதலர்களின் நெருக்கம் அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துச் சென்றால், இன்று போல் ஒரு மகிழ்ச்சியான நாள் கிடையாது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :  அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். இருப்பினும், உங்கள் தேவைகளை அடைய  உறுதியுடன் செயல் படுவீர்கள். இறைவன் வழிபாட்டின்  அவசியத்தை உணர்வீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22):  கூட்டு முயற்சி உங்களுக்கு பலன், பலம் இரண்டையும் தரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. அதற்காக முயற்சியை கைவிட வேண்டாம். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாட்டில் தவறாமல் ஈடுபடுங்கள். சிக்கல்கள் அகலும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 20):  அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிட்டும். வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு நகர இது முதல் புள்ளியாக இருக்கலாம். இருப்பினும், சக பணியாளர்களிடம் அமைதிப் போக்கினை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :  திருமண சுபயோகத்தை விரைவில் சந்திப்பீர்கள். எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றியைக் காண்பீர்கள். தோல்விகளும் உங்களை பலப்படுத்தும். பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்ளுங்கள்

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :  மற்ற கோள்கள் அனைத்தும் உங்களுக்கு உதவி புரிவதால் இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். ஒவ்வொரு கடினமான சூழ்நிலையும் உங்களை வலுப்படுத்துகிறது என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். எப்போதும் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : உங்களை சுற்றி நடக்கும் விசயங்களை புரிந்து கொள்ள முயற்சிப்பீர்கள். மெதுவாக நடந்தாலும், இறுதியில் நிதானமான வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் அன்பை சம்பாதிக்க முனைவீர்கள்.

Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment