Today Rasi Palan, 24th April 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 24th April 2019 : இன்றைய ராசி பலன், ஏப்ரல் 24, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
இன்று வெற்றி பெறுவதற்கு உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். மனதில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்க உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்திடுங்கள். உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
இன்றைய நாள் சுமூகமாகச் செல்லும். நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்கள் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருப்பார்கள். இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். உங்களின் மகிழ்ச்சியான மன நிலை காரணமாக தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
சில தடுமாற்றம் இருந்தாலும், கவலை வேண்டாம். சிறு சிறு சலசலப்புகள் வந்து நீங்கும். அது உங்கள் பொறுமையை சோதித்துப் பார்க்கும் அம்சமே. இறுதியில் வெற்றி உறுதி. குடும்பத்தில் நிம்மதி நிலவும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
இன்று வெற்றியைக் கொண்டாடுவீர்கள். உங்களிடம் காணப்படும் தைரியமும் உறுதியும் உங்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்றைய தினத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். உறவினர்களின் தொல்லை இருக்கும். வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். செலவுகளை சரியாக திட்டமிட்டு செலவிட வேண்டியது அவசியம்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் வந்த பிரச்சனைகள் முற்றிலும் விலகும். நண்பர்கள் வகையில் நிறைய உதவி கிடைக்கும். உத்யோகத்தில் சம்பள உயர்வு உண்டு. கணவன் – மனைவி உறவில் விரிசல் நீங்கும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
குடும்ப ஒற்றுமை மேலோங்கும். கடன் வாங்கும் பழக்கத்தை கை விடவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பொறுப்பாக இருக்க வேண்டிய நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
உடன்பிறப்பு வகையில் பண விரயம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் தவறான சேர்க்கையை தவிர்க்கவும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. உங்கள் செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். ஆடை, ஆபர்ண பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும். மிக கவனமாக அனைத்தையும் கையாள வேண்டியது அவசியம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
சாதுரியமான பேச்சால் மற்றவர்களை எளிதில் கவருவீர்கள். உடன்பிறந்தோர் நலனில் அக்கறை கொள்ளவும். பணப்புழக்கம் நல்ல முறையில் இருக்கும். தொழில், வியாபாரத்தை பெரியளவில் கொண்டு செல்ல முடியும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. குல தெய்வ பிராத்தனை நிறைவேறும். கடன் விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் நிறைய வாய்ப்புகள் வரும். மனமாற்றம் ஏற்படும். காதல் விவகாரம் கைகூடும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
உங்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் அல்லது பாராட்டு கிடைப்பது அரிது. உங்கள் திறமைகளைப் பயன்படுத்தி பணியாற்ற வேண்டும். இன்று செலவுகள் அதிகமாக காணப்படும். உங்கள் சேமிக்கும் ஆற்றல் குறைந்து காணப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.