Advertisment

Rasi Palan 24th December 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan in Tamil 24th December 2019: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 24th December 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 24th December 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 24th December 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

Rasi Palan 24th December 2019: இன்றைய ராசி பலன், டிசம்பர் 24, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்கள் விவகாரங்களில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்க வேண்டாம். நிலையான முடிவுகள் உங்களை பாதுகாக்கும். சில சறுக்கல் ஏற்பட்டாலும், தனித்துவமான உங்கள் செயல்பாடுகள் வெற்றிக்கு வித்திடும். நேர்மையாக செயல்படுவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தோல் தொடர்பான உடல் உபாதையில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்காலத்தை நோக்கி சிந்திக்கும் உங்கள் எண்ணங்களில் பலவற்றில் வெற்றியை காண்பீர்கள். விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உங்களது விடாப்பிடி குணம் சில இடங்களில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தினாலும், அதனால் தான் வெற்றியை வசப்படுத்துவீர்கள். தனித்துவிடப்பட்டது போல் உணர்ந்தாலும், உங்கள் பின்னால் எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். பெற்றோர்களுக்கு மரியாதை கொடுப்பீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

வெற்றிக்கான பாதையில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துகள். உங்கள் கிரக நிலைகள், சில உடல் உபாதைகளை கொடுத்தாலும், பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தை நோக்கி பயணிப்பீர்கள். சேமிப்பு அதிகமாகும், மதிப்பு பெருகும். ஆளுமை அதிகரிக்கும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

திருமணம் கைக்கூடும் சிம்ம ராசி நேயர்களே. உங்களது நீண்ட கால ஏக்கம், விரைவில் முடிவுக்கு வரும். நண்பர்களின் ஆலோசனைகள் பல இடங்களில் உங்களுக்கு பயன் தரும். வேண்டுதல்கள் நிறைவேறும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

கடினமாக சூழல்களில் இருந்து மீண்டு வருவீர்கள். இனி நிம்மதி பெருமூச்சு விடலாம். பெரிய அளவில் வளர்ச்சி இருக்கும். கணவருக்கு ஆதரவாக செயல்படுவீர்கள். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணிகளை தள்ளிப் போடாதீர்கள். தேவையை விட அதிகமாக இங்கு போட்டியாளர்கள் உள்ளார்கள் என்பதை மறக்க வேண்டாம். உங்கள் தலைக்கு மேல் கத்தி தொங்கவில்லை. ஆனால், எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

எங்கிருந்து பிரச்சனை வருகிறது என்று தெரியாத அளவிற்கு இன்னல்கள் ஏற்படலாம். ஆனால், அவற்றை உங்கள் சாதுர்யத்தால் முறியடிப்பீர்கள். கடவுள் வழிபாடு அவசியம்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

இன்று உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும். கடினமான பணிகளைக் கூட எளிதாக குறித்த நேரத்திற்கு முன் முடிப்பீர்கள். இன்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யம் அளவிற்கு பணப்புழக்கம் காணப்படும். உங்கள் சேமிக்கும் திறன் அதிகரிக்கும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

குழப்பம் ஏற்படாதபடி தெளிவான இலக்குகளை அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்க பரிகாரம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இறைவழிபாடு மற்றும் சிறப்பான திட்டம் மூலம் செலவுகளை கட்டுப்படுத்தலாம்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

இன்றைய நாள் அமைதியாக இருக்க பிரார்த்தனை மற்றும் தியானம் மேற்கொள்ளுங்கள். அதிக தண்ணீர் குடிப்பதும் எண்ணெய் பதார்த்தங்கள் தவிர்ப்பதும் உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஆரோக்கியத்தை கவனிக்காமல் விட்டால் தோல் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாள். இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். முக்கிய முடிவுகள் எடுக்க இது உகந்த நாள். இன்று நிதிநிலையில் நம்ப முடியாத அளவு பலன் இருக்கும். உங்கள் சொத்துக்கள் அதிகரிக்கும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment