Rasi Palan Today 24th November 2018 in Tamil : வாழ்வில் நமது ஒவ்வொரு செயலுக்கும் பின் விளைவுகள் உண்டு. நல்ல செயல்களுக்கு நல்ல விளைவுகள், தீய செயல்களுக்கு தீய விளைவுகள். இதுவே சத்தியம்.: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தருகிற ராசிபலன் பகுதியை ஒவ்வொரு நாளும் வாசகர்கள் இங்கு காணலாம்.
Rasi Palan 24th November 2018 : இன்றைய ராசி பலன், 24 நவம்பர் 2018
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
கடவுள் வழிபாட்டுடன் இன்றைய நாளை துவக்குவது பயன் அளிக்கும். அளவுக்கு அதிகமான நம்பிக்கை, எதிராக அமையலாம். இரும்பு தொழில் செய்பவர்களுக்கு இன்று அனுகூலமான நாள். தேவையான உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
நஷ்டத்தில் இருந்து ஓரளவிற்கு மீண்டு வருவீர்கள். இன்று வெற்றி காண்பதற்கு சிறந்த நாள். உங்களிடம் விரைந்து செயலாற்றும் உறுதியும் தைரியமும் காணப்படும். உங்களின் சரியான திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் உங்களிடம் காணப்படும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
இன்று நீங்கள் பிறருடன் பழகும் போது கவனமாகப் பழக வேண்டும். சிறிதளவு பரிச்சயமானவர்களிடம் இன்று தவறான புரிந்துணர்வு ஏற்படும். தேவையற்ற விளைவுகளை தவிர்க்க நீங்கள் உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உங்கள் வாழ்க்கையில் எது உங்களுக்கு உண்மையில் முக்கியம் என்பதை உணரும் நாள் இது. நீங்கள் பொதுவாக புறக்கணித்து வந்த விஷயங்கள் எல்லாம் இப்போது வெளிச்சத்திற்கு வரும். இதன்மூலம், உங்களின் டென்ஷன்கள் குறையும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
உங்களின் எதிர்கால கிரக அமைப்புகள் நிலைத்தன்மை இன்றி காணப்பட்டாலும், இன்றைய அமைப்பு சற்று ஆடம்பரமாகவே இருக்கும். பணியிடத்தில் திருப்திகரமான நிலை இருக்கும். நீங்கள் தரமான வகையில் பணிகளை முடித்துத் தருவீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
உங்கள் மதிப்பிற்கு ஏற்ற ஊதியம் தர வேண்டும் என எண்ணுவீர்கள். இன்று நீங்கள் உற்சாகமான ஆற்றலுடன் காணப்படுவீர்கள். நீங்கள் குறைந்த எதிர்பார்ப்புடன் கடினமாக உழைப்பீர்கள். இதனால் நற்பலன்கள் ஏற்படும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
கருத்து வேறுபாடு காரணமாக தவறான புரிந்துணர்வு காணப்படும். உங்கள் துணையின் கருத்துக்களை புரிந்து கொண்டு இருவரும் பரஸ்பரம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
தனிப்பட்ட உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கிரக நிலைகளின் செயல்பாடுகளால் உங்களது சில உறவுகளின் அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். அடுத்தவர்கள் உங்களுக்கு பாடம் எடுக்க வேண்டியது நிறைய இருக்கிறது.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
இன்றைய நாள் உங்களுக்கு மிக எளிதாக அமையும். வழக்கத்தைவிட அது மிருதுவானதாக இருக்கும். மற்றவர்களின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளையும், வாழ்த்துகளையும் நீங்கள் எந்த அளவிற்கு எடுத்துக் கொள்கிறீர்களோ அந்தளவிற்கு நீங்கள் முதிர்ச்சியடைவீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள் இது. உங்கள் பணியிடங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வினையாற்றுவதற்கு முன்பு யோசித்து செயல்படுங்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
மற்றவர்களை நம்பாமல் உங்களை நம்ப வேண்டிய நேரமிது. உங்கள் தொழில் பார்ட்னர்கள் கூட உங்களுக்கு உதவுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. உங்கள் கைகளே உங்களுக்கு உதவி.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
இன்று நீங்கள் பதட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வளர்ச்சி குறித்த உங்கள் முயற்சிகளில் முன்னேறிச் செல்லுங்கள். உங்கள் மனதில் நம்பிக்கையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.