Rasi Palan 24th October 2020: இன்றைய ராசிபலன்

Horoscope Today: உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 24th october 2020: இன்றைய ராசிபலன்
Rasi Palan 24th october 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 24th October 2020: இன்றைய ராசிபலன்: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக்கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 24th October 2020: இன்றைய ராசி பலன், அக்டோபர் 24, 2020:

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

ஜோதிடர்களுக்கு இரண்டு வகையான காலம் இருக்கிறது. காலத்திற்கு கிரேக்க சொற்களில் பெயரிடப்பட்டுள்ளது. முதலில் Chronos or clock time என்ற முறையில் நாம் காலத்தை அளவிடுகிறோம். அடுத்து காலத்திற்கு Kairos or qualitative time என்ற பயன்பாடு உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நாளின் தன்மையை நமக்கு சொல்கிறது. அந்த நாள் நல்லதா என்பதை திருமணத்திற்காகவோ அல்லது வேலைக்காகவோ சொல்கிறது. நாம் ஜாதகக் கணக்குகளை எழுதும்போது கைரோஸைப் பயன்படுத்துகிறோம்.

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : இதுவரை உங்களுக்கு தடைக்கல்லாக இருந்து வந்த காரியங்கள் இனி படிக்கல்லாய் மாறி உங்களை முன்னேற்றும். பல வழிகளில் காசு பணம் வந்து சேர்ந்து பொருளாதாரம் உயரும்.எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய தொடர்புகள் உண்டாகும்.

 


ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :  எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அமைதியை கடைபிடித்து வெற்றி பெறுவீர்கள். அவசர முடிவுகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை.நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்

மிதுனம் (மே 22 – ஜூன் 21) :  அடுத்த சில நாட்கள் உங்களுக்கு கடுமையானதாக இருக்கும். அதற்காக, சோதனைகளை கண்டு அஞ்சி ஓடிவிடக் கூடாது.இந்தக் காலத்தில் உங்களது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது அவசியம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23):  சில  ஆச்சர்யமான  விஷயங்கள் இன்று உங்களுக்காக காத்திருக்கின்றன. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் . அனைத்தும் நல்லதாகவே நடக்கும். மனம் லேசாக உணரும் நாள் இன்று.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :  மாற்றத்தை நோக்கி நகரும் திட்டங்கள் உங்களிடம் நிறையவே இருக்கும். ஆனால், அதை செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கும். கிரக நிலைகளின் மாறுபட்டால், சில சங்கடங்கள் ஏற்படும். ஆனால், அவை தற்காலிகமானதே.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :  முற்றிலும் புதிய பாதையில் பயணம் செய்வீர்கள். அது உங்களுக்கு மன நிறைவைத் தரும். வெற்றி, நிம்மதி, மகிழ்ச்சி வந்து சேரும் நாள். காதலில் வெற்றி கிடைக்கும். குறிப்பாக, திருமணம் விரைவில் நடக்கும். கணினி பிரிவில் பணிபுரிபவர்களுக்கு ஏற்றம் உண்டாகும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : உங்கள் திட்டங்களில் உங்களுடன் பணி செய்பவர்களையும், மற்றவர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். தலைமைப் பண்பு இயற்கையாக உங்களுக்கு உண்டு. அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உடல் நலனில் முன்னேற்றம் காண்பீர்கள். யோகம் உங்களைத் தேடி வரும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :  கற்கும் திறன் அதிகரிக்கும். மாணவர்களின் செயல்பாட்டில் நல்ல மாற்றங்கள் தெரியும். கட்டிடத் தொழில் பணியாற்றுவோருக்கு உயர் பதவிகள் கிடைக்கவோ, ஊக்கப் பரிசு போன்றவையோ கிடைக்க வாய்ப்புள்ளது.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :  வெற்றிப் பெற வேண்டுமெனில், உங்கள் பணிகளை எவ்வளவு சீக்கிரம் தொடங்க வேண்டுமோ, அவ்வளவு சீக்கிரம் தொடங்குங்கள். அப்படி தாமதப்படுத்தினால், அது உங்கள் பார்ட்னருக்கோ, போட்டியாளருக்கோ சாதகமாக அமையும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :  நேர்மையான எண்ணங்கள் உங்களை மேலோங்க வைக்கும். உங்களது கடந்த கால தவறுகள் மறைந்தும், மறந்தும் போகும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20):  சுய ஆர்வம் கொண்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அதுவே உங்களை முன்னேற வைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கோவிலுக்கு சென்று வாருங்கள், குழப்பங்களில் இருந்து தெளிவு பிறக்கும்

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rasi palan 24th october 2020 rasi palan today

Next Story
Rasi Palan 23rd October 2020: இன்றைய ராசிபலன்Rasi Palan 22th October 2020 Tamil Rasi Palan Daily horoscope
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com