Advertisment

Rasi Palan 25th April: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 25th April Rasi Palan in Tamil: தேவையில்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் உங்கள் மனநிம்மதி கெட்டும் போகும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 25th April: இன்றைய ராசிபலன்

Rasi Palan 25th April: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 25th April 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 25th April 2019 : இன்றைய ராசி பலன், ஏப்ரல் 25, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

அறிவியல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உணவுக் கட்டுப்பாடு அவசியம். உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நேரம் கடந்து பணியை முடிக்கும் வழக்கத்தை கைவிடுங்கள். வெற்றி வந்து சேரும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

கடன் பிரச்னைக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். பணவரவு முன்பை விட சிறப்பாக இருக்கும். புதிய வீடு வாங்கும் யோகம் ஏற்பட்டுள்ளது. குடும்ப உறவில் மகிழ்ச்சியும், நிம்மதியும் பிறக்கும். திருப்தியான நாள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

கணக்கில்லாமல் அன்பு செலுத்துவீர்கள். உங்கள் பலமே அதுதான். பணியிடத்தில் வழக்கம் போல எல்லாவற்றையும் ஜஸ்ட் லைக் தட் என்று செய்து முடிப்பீர்கள். பண உதவி செய்வதில் கவனமாக இருக்க முயலுங்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

மீண்டும் உங்கள் வாழ்க்கையின் ஃபார்வேர்ட் காலத்திற்கு செல்ல நினைத்தால் நிச்சயம் முடியாது தானே? பிறகு, எதற்கு வருத்தம். தூக்கிப் போட்டு அடுத்த வேலைக்கு செல்லுங்கள். வெற்றி உங்கள் வாசல் கதவு அருகே தான் நிற்கிறது.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

ஆச்சர்யமான சில விஷயங்கள் இன்று உங்களுக்காக காத்திருக்கின்றன. ஆனால், பயம் வேண்டாம். அது நல்லதாகவே இருக்கும். தேவையான அளவிற்கு சம்பாத்யம் கொண்ட பணி கிடைக்க வாய்ப்புள்ளது. மனம் லேசாக உணரும் நாள் இன்று.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

மாற்றத்தை நோக்கி நகரும் திட்டங்கள் உங்களிடம் நிறையவே இருக்கும். ஆனால், அதை செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கும். கிரக நிலைகளின் மாறுபட்டால், சில சங்கடங்கள் ஏற்படும். ஆனால், அவை தற்காலிகமானதே. சுமாரான நாள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

உங்கள் எதிர்கால திட்டங்கள் குறித்து நல்ல விழிப்புணர்வு உங்களுக்கு கிடைத்திருக்கும். அது உங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இருப்பினும், குடும்ப விஷயத்தில் மேலும் அக்கறை காட்ட வேண்டும். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

நண்பர்களின் ஆலோசனை கேட்டு நடந்து கொள்வீர்கள். அவர்கள் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பீர்கள். ஞாபக மறதி சிக்கலால் சில சமயங்களில் அசௌகரியமான தருணங்களை சந்திக்க நேரிடும். சற்று உஷாராக இருங்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்கள் பாக்கெட் பர்ஸ் காலியாகும் நாள் இது. உண்மை தான். தேவையில்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் உங்கள் மனநிம்மதி கெட்டும் போகும். பெற்றோர்களுக்கு மதிப்பு கொடுங்கள். வெற்றி உறுதி.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

அதிகம் அன்பு வைப்பதாலேயே, சில ஏமாற்றங்களை காண்பீர்கள். அது உங்களுக்கு பழக்கப்பட்டதாக இருந்தாலும், கவனம் தேவை. மாணவர்களின் கல்வித் திறனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

பணியிடத்தில் நிறைய மாற்றங்களை காண்பீர்கள். அது உங்களின் ஏற்றத்திற்கு வழிவகுக்கும். உங்களது முயற்சியும் சேரும்போது, வெற்றி தேடி வரும். குடும்ப உறவில் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

வெளியூர் பயணம் இருந்தால், சற்று தள்ளி வையுங்கள். முடிந்த இந்த வாரம் முழுவதுமே ஒத்தி வையுங்கள். தோல்விகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல்நலம் சார்ந்த பிரச்சனை ஏற்படும். கவனமாக இருத்தல் வேண்டும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment