Rasi Palan 25th December 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan in Tamil 25th December 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 25th December 2019: இன்றைய ராசிபலன்
Rasi Palan 25th December 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 25th December 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

Rasi Palan 25th December 2019: இன்றைய ராசி பலன், டிசம்பர் 25, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

தேவைக்கு ஏற்ப சேமிக்கும் பழக்கம் உங்களை பாதுகாக்கும். நண்பர்களின் கருத்துகளை முற்றிலுமாக புறக்கணிக்காதீர்கள். அருகில் இருப்பவர் தங்களை மேதை என நினைத்துப் பேசும் போது, நீங்கள் காக்கும் அமைதி உங்களை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்லும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

தனித்து விடப்படவில்லை என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். முன்பே சொன்னது போல், தோல் சம்பந்தமான பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபடுவீர்கள். இருப்பதை வைத்து நிம்மதியாய் வாழ்வதே உண்மையான மகிழ்ச்சி. பண வசதி மகிழ்ச்சியை கொடுத்துவிடாது.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

சேர்க்கை சரியில்லை என்றும் பொதுவாக கிராமங்களில் சொல்வார்கள். அது உங்களுக்கு இப்போது பொருந்தும். கொஞ்சம் கவனம் தேவை. எதிர்காலம் குறித்து கொஞ்சம் சிந்தித்தால் நல்லது. எந்நேரமும் நமக்கு பிடித்தவற்றை செய்யவோ அல்லது அடம் பிடித்து செய்ய வைக்கவோ நாம் ஒன்றும் குழந்தைகள் அல்ல.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

என்ன தடைகள் வந்தாலும், அவை தானாகவே சுக்கு நூறாகிவிடும். நண்பர்களின் அனுசரணை இல்லை என்றாலும், தனியாகவே ஆள்வீர்கள். உங்களுக்கு நீங்களே ராஜா. நீங்களே தன்னம்பிக்கை. உங்களது வெற்றிக்கு நீங்களே முழு காரணம். அதில் யாரும் பங்கு போட்டுக் கொள்ள உரிமையில்லை. வெற்றி உங்கள் பக்கம்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

பெற்றோர்களின் வழிகாட்டுதல் உங்களை அடுத்தக் கட்டத்துக்கு நகர வைக்கும். பார்த்துக் கொண்டே இருங்கள், அடுத்த வாரத்துக்குள் நீங்கள் நினைத்தது நிறைவேறும். உடல்நலனில் அக்கறை தேவை. குறிப்பாக, முதுகு தொடர்பான பிரச்சனையை அலட்சியப்படுத்தாமல் இருப்பது நல்லது.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

மாற்றம் உங்கள் வாழ்க்கையிலும் நடக்கும். கவலை வேண்டாம். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக செயல்பட உள்ளது. வெற்றி உறுதி நண்பர்களே. சேமிப்பு பழக்கத்தை துவக்கிக் கொள்ளுங்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

கேள்விக்கான விடை கிடைக்கவில்லை எனில், ஒன்று கேள்வி புரியாதிருக்க வேண்டும், அல்லது காது கேட்காதிருக்க வேண்டும், அல்லது பதில் தெரியாதிருக்க வேண்டும். இந்த மூன்றைத் தாண்டி வேறு எதற்கும் சாத்தியமில்லை. நிச்சயம் உங்களுக்கு பதில் கிடைக்கும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உங்கள் கிரகங்கள் தீவிர ஆலோசனையில் உள்ளன. உங்கள் சொந்த சிந்தனைகளை வெளிக்கொணர வேண்டிய நேரமிது நண்பர்களே. நீண்ட காலத்திற்கு நிலைக்கும் அளவுக்கு செய்யும் சம்பவம் சிறக்கும். புரியுது தானே!.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

குடும்ப உறவில் மகிழ்ச்சி நீடிக்கும். இதனால், நீண்ட காலம் மனதில் இருந்த ரணம் குறையும். சில ஆச்சர்யமான அதிர்ச்சிகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. அதற்காக அதிகளவு கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. அது உங்களை பேராபத்தில் கொண்டு போய் நிறுத்தும். சரியான நேரத்தில் சரியான வார்த்தைகள் உபயோகப்படுத்த வேண்டிய நாள் இது.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

புதிய வாழ்க்கைக்கான நல்ல அடித்தளம் போடுவீர்கள். மகிழ்ச்சியான நாள். முன்பு உங்களை உதாசீனம்படுத்தியவர்கள் இப்போது உங்களை ஆராதிப்பார்கள். அதனை நம்ப வேண்டாம். உண்மை எது, பொய் எது என்பதை பிரித்து பழக முயற்சி செய்யுங்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

வேலை உடனடியாக முடிக்க வேண்டும் என்பதற்காக மாற்று வழிகளை தேர்வு செய்வீர்கள். அது நல்லதிலும் போய் முடியலாம், தோல்வியிலும் முடியலாம். பிரச்சனைகளை பேசித் தீர்க்க வேண்டிய நேரமிது.

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rasi palan 25th december 2019 today rasi palan

Next Story
Rasi Palan 24th December 2019: இன்றைய ராசிபலன்Rasi Palan 24th December 2019: இன்றைய ராசிபலன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com