X

Rasi Palan 25th January 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan in Tamil 25th January 2020: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 25th January 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 25th January 2020 : இன்றைய ராசி பலன், ஜனவரி 25, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

குடும்ப உறுப்பினர்களிடையே எதிர்கால வாழ்க்கை குறித்து ஆலோசனை நடத்துவீர்கள். எண்ணிய காரியங்கள் நினைத்தபடி ஈடேறும். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

விருப்பமில்லை என்றாலும் சில விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டிவரும். பிரியமானவர்கள் தக்கநேரத்தில் ஆதரவு அளிப்பார்கள். உணவு பழக்கவழக்கங்களில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

நீண்ட தொலைவில் இருந்து வரும் தகவல்கள் மகிழ்ச்சியளிக்கும். அதிக விரயம் ஏற்படும் என்பதால் சிந்தித்து செயல்படவும். நிதி விவகாரங்களில் பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

நிதிவிவகாரங்களில் போதும் என்ற மனநிலை ஏற்படும். தேவையில்லாத விஷயங்களை தவிர்ப்பதனால், மன உளைச்சல்களிலிருந்து தப்பிக்கலாம். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மற்றவர்களின் பரிகாசப்பேச்சால் மனம் சோர்வடைவீர். குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பிரயத்தனம் செய்யவேண்டி வரும். குடும்பலநவனுக்காக அதிக பொறுப்புகளை ஏற்பீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

எத்தகைய தருணத்தையும் வெற்றிப்படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறுவீர்கள். பொதுவிஷயங்களில் அதிக அக்கறை காட்டுவீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

மகிழ்ச்சியான நாள். சுதந்திரக்காற்றை சுவாசிப்பீர்கள். பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மற்றவர்களின் தவறுகளை மன்னிப்பீர்கள். பிறரால் மதிக்கப்படுவீர்கள். பலர் நட்பு பாராட்டுவர்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

மற்றவர்களை மனக்கண்ணால் ஆராய்வீர்கள். பழைய விவகாரங்களுக்கு தீர்வு காண முயல்வீர்கள். வாகன போக்குவரத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உங்களின் வார்த்தைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனம் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

வழக்கமான நடைமுறைகளிலிருந்து விலகிச்செல்வீர்கள். மனஅமைதிக்கு தியானம் உள்ளிட்டவைகளை விரும்புவீர்கள். உணவு பழக்கவழக்கங்களில் அதிக கவனம் அவசியம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

கிரகங்களின் சாதகமான பார்வையினால், திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். நிதிவிவகாரங்களில் திருப்தி ஏற்படும். மகிழ்ச்சியான நாள்.

Web Title:

Rasi palan 25th january 2020 rasi palan today

Next
Just Now
X