Advertisment

Rasi Palan 25th July: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 25th July Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 25th July: இன்றைய ராசிபலன்

Rasi Palan 25th July: இன்றைய ராசிபலன்q

Today Rasi Palan, 25th July 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 25th July 2019: இன்றைய ராசி பலன், ஜூலை 25, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

எப்போதும் அதிக மரியாதையை எதிர்பார்ப்பீர்கள். அதுவும் போதுமான அளவு கிடைக்கும். அருகில் இருப்பவர்களை கூட நம்ப மாட்டீர்கள். அது சில சமயம் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும், அதனால் சில உறவுகளை இழப்பீர்கள். உங்களுக்கு தேவையானவற்றில் குறியாக இருப்பீர்கள். அதனால், உங்களுக்கு ஏற்றம் தான்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

நீதிமன்றத்தில் பல நாட்கள் இழுத்துக் கொண்டிருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். இதனால், மன நிம்மதி கிடைக்கும். தெளிவான முடிவுகளை நோக்கி குடும்பத்தை நகர்த்திச் செல்வீர்கள். சில சமயங்களில், உணவு விஷயங்களில் பணத்தை வீணடிப்பீர்கள். அதிலும் கவனம் இருந்தால் உங்களுக்கு சிறப்பு.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

விளையாட்டுத் துறையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சற்று ஆதிக்க மனப்பான்மையை குறைத்து நடந்து கொண்டால் வெற்றிகளை வசப்படுத்தலாம். அமைதி பல இடங்களில் உங்களை பாதுகாக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பெற்றோரின் ஆலோசனை தக்க சமயத்தில் உதவும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

சில பேர் மீது அதீத அன்பு செலுத்துவீர்கள். அதுவே உங்களுக்கு ஆபத்தாக முடியலாம். வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. நேர்மையாக இருப்பீர்கள். உங்களுடைய நற்குணங்களால் பணவரவு சிறப்பாக இருக்கும். நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவு செய்வீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

குடும்பத்தின் உள்கட்டமைப்புகளை வலிமையாக்க முயற்சி மேற்கொள்வீர்கள். உங்களின் முடிவுகளில் மற்றவர்கள் தலையிட எக்காரணம் முன்னிட்டும் அனுமதிக்க வேண்டாம். அதனால், உங்களுக்கு நஷ்டமே கிடைக்கும். அதேபோல், எடுத்த முடிவுகளில் இருந்து பின்வாங்க வேண்டாம். தொடர் சறுக்கல்கள் இனி இருக்காது.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

காதலர்களுக்கு இனிமையான நாள். பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் அதிகம் நேரம் செலவிடுவீர்கள். கவலை மறப்பீர். நிம்மதியான நாள் இன்று.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

சில சங்கடங்கள் ஏற்படலாம். ஆனால், உங்கள் திட்டங்களில் யாரும் தலையிடப் போவதில்லை. அடுத்த ஒரு வாரத்திற்கும் உங்களுக்கு ஹேப்பி தான். அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்து சென்றுக் கொண்டே இருப்பீர்கள். தேவைக்கேற்ப உங்கள் வெற்றிப்படிக்கட்டுகள் அமையும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

பணவரவுகள் இருக்கும். வெற்றிக்காக நீங்கள் தரும் ஒவ்வொரு உழைப்பிற்கும் பயன் உண்டு. எதிர்கால தேவையை உணர்ந்து செயல்படுவீர்கள். மருத்துவத்தில் செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை தேவை.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்கள் வாழ்வை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் முக்கியமான நிகழ்வு இன்று நடக்கும். அது உண்மையில் உங்களுக்கு பயன் தரும். பல நல்ல செய்திகள் உங்களை நோக்கி வரும் என்பது மகிழ்ச்சியான கூடுதல் தகவல். எதற்காகவும் உங்கள் கொள்கையை மாற்றிக் கொள்ளாதீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

அனைத்து விஷயத்திலும் முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணி நிமித்தமாக வெளிநாடு செல்வதற்கான நேரம் வந்துள்ளது. கடல்வழி பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். தேவைக்கு ஆதிகமாக மின் சாதனப் பொருட்கள் வாங்கி உங்கள் சேமிப்பினை கரைப்பீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றும் போது, உங்களது செயல்பாடு தனித்து தெரியும். அதுவே உங்களுக்கு வெற்றி தான். இதற்கு முன் உங்களிடம் ஏற்பட்ட பிணக்கு நீங்கி, சிலர் நட்பு கொண்டாடுவார்கள். உங்களுக்கு மனதளவில் அது ஆறுதல் தரும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

கணிசமாக உங்கள் முயற்சியில் முன்னேற்றம் இருக்கும். இரண்டு நாளில் அடையும் இலக்கை நான்கு நாட்களில் அடைவீர்கள். அவ்வளவு தான். ஆனால், இலக்கை சென்றடைந்து விடுவீர்கள். நண்பர்களின் அறிவுரை கைக்கொடுக்கும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment