Rasi Palan 25th June 2020: இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan june 25th, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 25th June 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 25th June 2020: இன்றைய ராசி பலன், ஜூன் 25, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்கள் மனசாட்சிப்படி நடந்துகொள்வீர்கள். நேர்மறை எண்ணத்துடன் செயல்படுவீர்கள். பழைய கலாச்சார சம்பிரதாயங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள். புதிய பாதையை உருவாக்கி முன்னேற்றமடைவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

தொழில் ரகசியங்களை பிறரிடம் பகிராமல் இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இளைய சகோதரின் உதவி தக்கசமயத்தில் கைகொடுக்கும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

நல்ல செய்திகளால் மனம் மகிழ்ச்சியடைவீர்கள். உங்களின் கருத்துகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.நிதி விவகாரங்களில் ஏற்பட்டுள்ள இடர்களை களைவீர்கள். தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

தொழில் சார்ந்த விசயங்களில் முன்னேற்றங்கள் ஏற்படும். பங்காளிகளிடையே நட்புணர்வு ஏற்படும். மற்றவர்களின் கருத்துகளை ஏற்க தயங்குவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மனஅமைதிக்கு உகந்த நாள். மற்றவர்கள் உங்களை அடக்கி ஆள நினைப்பர். விளைவுகளை முன்னரே அறிந்து செயல்களில் ஈடுபடுவது நல்லது. முன்எச்சரிக்கை உணர்வு விரயங்களை தவிர்க்க உதவும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

மற்றவர்களின் உணர்வுகளை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வேறுபாடுகளை களைவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

பொதுநல விசயங்களில் அதிக அக்கறை கொள்வீர்கள். தேவையில்லாத விசயங்களை புறந்தள்ளுவீர்கள். விருந்து,விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உங்களின் கருத்துகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். சிலர் புறக்கணித்தாலும், பலரது வரவேற்பால் மனம் மகிழ்ச்சி கொள்வீர்கள். வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணர்வீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

சாகச விஷயங்களில் மனம் நாட்டம் கொள்ளும். இலக்குகளை நோக்கி முன்னேறுவீர்கள். கடந்தகால அனுபவங்களினால் புதிய திட்டங்களை எளிதாக செய்துமுடிப்பீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

முக்கிய விசயங்களில் முடிவெடுக்க திணறுவீர்கள். புதிய உறவுகள் கிடைக்கும், நட்பு வட்டாரம் விரிவடையும். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

பாதுகாப்பு விவகாரங்களில் அதிக கவனம் கொள்வீர்கள். நிலைத்தன்மை குறித்த யோசனையில் இறங்குவீர்கள். மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

பணிச்சுமையால், சோர்வுடன் காணப்படுவீர்கள். செயல்திறமையால் தனித்து நிற்பீர்கள். எதிர்பாரத சம்பவங்களால் மனம் மகிழ்வீர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Horoscope in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Rasi Palan by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close