Today Rasi Palan, 25th March 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 25th March 2020: இன்றைய ராசி பலன், மார்ச் 25, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
உங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மற்றவர்கள் மீது திணிப்பது சரியாகாது. உங்கள் பணியிடத்தில் இது ஃபாலோ செய்தால், பெரியளவில் உங்களால் சோபிக்க முடியாது. தேவையில்லாத விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
உங்கள் மதிப்பை உணர்ந்து சிலர் உங்களுடன் கைக்கோர்ப்பர். சில வெற்றிகள் மீண்டும் உங்கள் கைக்கூடும். வலிமையான கட்டமைப்பை உருவாக்க முயற்சி செய்வீர்கள். யாருக்காகவும் தங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டாம்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
கடைசி நிமிடத்தில் கூட உங்களுக்கான முடிவுகள் மாறலாம். அது பாஸிட்டிவாக இருக்குமா, நெகட்டிவாக இருக்குமா என்பதே இங்கு முக்கியம். உடல் நலத்தில் முன்னேற்றம் இருக்கும். சிக்கலான சில சூழல்களை தவிர்த்துவிடுங்கள். இரட்டை மனதுடன் எந்தவொரு காரியத்திலும் கை வைக்க வேண்டாம்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
தேவைப்படும் இடத்தில் உங்கள் ஆளுமைகளை வெளிப்படுத்துவீர்கள். இதுநாள் வரையிலான உங்கள் அறியாமை நீர்த்துப் போகும். உங்களை சுற்றி இருப்பவர்களை ஆச்சர்யப்படுத்துவீர்கள். உங்கள் முடிவுகள் துல்லியமாக வெற்றியடையும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
தோல்வியில் இருந்து பாடத்தை கற்றுக் கொள்வீர்கள். அதேசமயம், அதே தவறை மீண்டும் செய்யத் துணிவீர்கள். குடும்ப உறவில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களின் படிப்புத் திறன் அதிகரிக்கும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
விளையாட்டுக்கு கூட விளையாட்டாக இருக்காதீர்கள். உங்கள் வாழ்க்கை படலத்தில் மிகவும் சீரியஸாக இருக்க வேண்டிய கட்டங்கள். இலக்கு என்ன என்பதை யோசித்து செயல்படுங்கள். முடிவுகளை உடனுக்குடன் மாற்றாதீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
தெளிவான இலக்கை நிர்ணயித்து, அதை நோக்கி பயணம் செய்வீர்கள். இடையில் சில தடைகள் ஏற்பட்டாலும், துடைத்துச் செல்லும் ஆற்றலைக் கொண்டிருப்பீர்கள். இருப்பினும், தோல்விகள் மிஞ்சும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
யாரும் நமது திறமையை கண்டுக் கொள்ளவில்லையே என்று நினைக்க வேண்டாம். கூடிய விரைவில் வெற்றி உங்களைத் தேடி வரும். இருப்பினும், அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். சுமாரான நாள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
கனிவான பேச்சுக்கள் உங்களின் தரத்தை உயர்த்தும். மற்றவர்களுக்கு உங்கள் மீது மரியாதையை ஏற்படுத்தும். பெண்களுக்கு உடல்நிலையில் சில தொந்தரவுகள் ஏற்படும். மருத்துவ செலவுகள் ஏற்படும் நாள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வீடு, தோட்டம் வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், வெற்றிகள் தானாகவே வசப்படும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பீர்கள். அது உங்களை மேலும் வலிமையான நபராக மாற்றும். மன அழுத்தங்கள் குறையும். சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வாராக்கடன் இந்த முறை உங்கள் பாக்கெட்டில். கவலை வேண்டாம். நண்பர்களுக்காக செலவிடும் நேரத்தை சற்று குறைத்துக் கொள்ளலாம். உங்கள் கடமைகளை முதலில் நிறைவு செய்யுங்கள் நண்பர்களே.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil