Advertisment

Rasi Palan 25th May 2020: இன்றைய ராசிபலன்

Today rasi palan May 25th - இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today rasi palan, rasi palan May 25th, இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan May 25th, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 25th May 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 25th May 2020: இன்றைய ராசி பலன், மே 25, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

பொழுதுபோக்கு விஷயங்களில் மனம் செல்லும். பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயல்வீர்கள். பணியிடங்களில் புதிய மாற்றங்களினால் மனம் மகிழ்ச்சியடைவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உங்களது வார்த்தைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். நிதி விவகாரங்களில் திருப்திகரமான நிலை நீடிக்கும். சிறு தொலைவு பயணம் மேற்கொள்வீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

நிதி விவகாரங்களில் எச்சரிக்கையாக அடி எடுத்து வைக்க வேண்டும். முடிவுகள் திருப்திகரமானதாக இருக்கும். மற்றவர்களுடன் விஷயங்களை பகிர்ந்துகொள்வீர்கள். வார்த்தைகளில் கவனம் அவசியம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

எதிலும் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். ரகசியங்களை மற்றவர்களுடன் பகிராமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் அறிவுரைகள் தக்கநேரத்தில் கைகொடுக்கும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

கிரகங்களின் சாதகமான பார்வையினால் எண்ணிய காரியங்கள் ஈடேறும். சிறு தொந்தரவுகளுக்கும் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால், நிதி விவகாரங்களில் அதிக முன்னெச்சரிக்கை அவசியம். மற்றவர்களின் அறிவுரைகளை ஏற்பது நல்லது.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று ஆக இருக்கும். மனதிற்கினிய சம்பவங்கள் நடந்தேறும். நடப்பவை நன்மைக்கே என்பதை உணர்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

சிறு தொலைவு பயணம் செல்வீர்கள், உங்களுக்காக சிலர் காத்திருப்பர். நேரத்தை விரயமாக்க விரும்பமாட்டீர்கள். புத்துணர்வு அளிக்கும் விசயங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

மற்றவர்களிடம் அந்தரங்க விசயங்களை பகிராமல் இருப்பது நல்லது. இக்கட்டான நேரத்தில் உண்மையான நண்பர்களை அறிந்துகொள்வீர்கள். சட்டத்திற்கு புறம்பாக எதுவும் செய்ய வேண்டாம்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

புதிய வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார நிலை சீராக இருக்கும். மற்றவர்களின் புன்னகைக்கு காரணமாக அமைவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

இரகசியங்களை பாதுகாப்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். வாக்குறுதிகளை ஆராய்ந்து வழங்கினால் இழப்புகளை தவிர்க்கலாம். நிதி விவகாரங்களில் எச்சரிக்கையுடன் அடி எடுத்து வைப்பது நல்லது.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

உங்களின் இலக்குகளை மற்றவர்கள் புரிந்துகொள்வர். தடைக்கற்களை படிக்கற்களாக கொண்டு முன்னேறுவீர்கள். சவாலான பணியினையும் தக்க நேரத்தில் முடித்து மற்றவர்களை ஆச்சரியப்படுத்துவீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். விளைவுகளை அறிந்து பணிகளில் ஈடுபடுவது நல்லது. தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கும். மகிழ்ச்சியான நாள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment