Rasi Palan 25th November 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan in Tamil 25th November 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan in Tamil 25th November 2019: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 25th November 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 25th November 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 25th November 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 25th November 2019: இன்றைய ராசி பலன், நவம்பர் 26, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

Advertisment
Advertisements

நட்புகளால் பாராட்டப்படுவீர்கள். ரகசியங்களை பாதுகாக்க முற்படுவீர்கள். கடந்தகாலங்களில் மனதை குழப்பிவந்த விஷயத்திற்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

மற்றவர்களுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படும் என்பதால் கவனமுடன் இருக்கவேண்டிய நாள். உங்களை சுற்றி தவறான வதந்திகள், பொய் பரப்புரைகள் உலவுவதால் மனம் அதிகம் சஞ்சலப்படும். நிதானம் காப்பது நல்லது.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

மகிழ்ச்சியான நாள். புதன் கிரகம் சாதகமாக இருப்பதால் உற்சாகமாக செயல்களில் ஈடுபடுவீர்கள். செயல்களில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

வாரத்தின் முதல்நாளிலேயே உற்சாகத்தில் மிதக்க துவங்குவீர்கள். எத்தகைய முடிவுகள் ஆயினும் அதை திறம்பட எதிர்கொள்வீர்கள். சுயகட்டுப்பாடு மற்றும் சுய ஒழுக்கம் உள்ளிட்டவைகளே உங்களது வெற்றிக்கான காரணங்கள் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

சந்திரன் உள்ளிட்ட கிரகங்களின் சாதகமற்ற பார்வையினால், மனம் அடிக்கடி சஞ்சலப்படும். மாற்று மதத்தினருடன் கருத்து வேறுபாடு தோன்றும் என்பதால், பேச்சில் நிதானம் தேவை. தியானம் மனதை ஒருமுகப்படுத்தும்

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

இலாபகரமான நாள். நிர்வாகத்தில் உயர்பதவியில் இருப்பவர்களுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கடந்தகால நிகழ்வுகளை அசைபோடுவீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

சூரியன் உள்ளிட்ட கிரகங்களின் சாதகமான பார்வையினால், வெற்றிகளை குவிக்கப்போகிறீர்கள். நிதிச்சந்தையில் நல்ல லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். வீட்டு உபயோகத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். எதிலும் லாபம் அடைவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

எதிர்பார்ப்புகள் நிறைவேற கடின உழைப்பு அவசியம். வழக்கமான பணிகளிலிருந்து விலகிச்செல்லாதீர்கள். சவாலான சந்தர்ப்பங்களை தவிர்ப்பது நலம்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

நிதிவிவகாரங்களில் முன்னேற்றமான சூழல் நிலவும். சூரியன் – சந்திரன் கிரகங்களின் சாதகமான பார்வையால், கடந்தகால பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

குடும்பம் மற்றும் பணியிடங்களில் சிலநேரங்களில்தான் மற்றவர்களின் உதவி கிடைக்கும். சிலநேரங்களில் எதிரியாக மாற வாய்ப்பு உள்ளதால், பேச்சில் நிதானம் தேவை. மனக்குழப்பங்களால் அவதிகள் ஏற்படும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

பின்விளைவுகளை பற்றி சிந்திக்காமல் துணிந்து முடிவெடுப்பீர்கள். கிரகங்களின் சாதகமான பார்வையினால், பெரும்பாலான விஷயங்களில் வெற்றிக்கு வாய்ப்பு உண்டு. இலக்கை நோக்கி சீராக முன்னேறுவீர்கள்..

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

பெரியோர்களின் ஆசி தக்க சமயத்தில் உதவும். நண்பர்கள், உறவினர்கள் தங்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவார்கள். பலவழிகளில் இருந்து உதவிகள் கிடைக்கும். அனைவரிடமும் நட்பு பாராட்டுவீர்கள்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: