Today Rasi Palan, 25th October 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 25th October 2019: இன்றைய ராசி பலன், அக்டோபர் 25, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
சட்டை கிழியலைன்னா அது சண்டையே இல்லை என்பதை உணர்வீர்கள். முக்கிய விஷயங்களில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பீர்கள். நீண்டகால பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
பயணங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள். செய்யும் காரியங்களில் திருப்திபடுவீர்கள். வாகன போக்குவரத்தில் கவனம் அவசியம்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
எதிலும் உங்கள் கால்தடம் இருக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். நிதி விவகாரங்களில் அதிக கவனம் வேண்டும். உங்களின் கருத்துகளுக்கு மற்றவர்கள் மதிப்பு அளிப்பார்கள். தேவையில்லாதவற்றை விட்டு விலகுவீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
நல்லது, கெட்டதுமான அனுபவங்களை ஒரேநாளில் பெறுவீர்கள். இலக்குகளை சரியாக தீர்மானித்து அதற்கேற்ப உங்களது செயல்பாடுகளை திட்டமிடுவீர்கள். தகுதியில்லாத நபர்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது தவறானது என்பதை உணர்வீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
மன சஞ்சலம் அடையும் நாள் என்பதால், மன அமைதி காக்கவும். வார்த்தைகளில் நிதானம் அவசியம். உணர்ச்சிகளுக்கு அதிக மதிப்பளிக்காதீர்கள். மன அமைதிக்கு தியானம் போன்றவற்றை மேற்கொள்ளவும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
பொதுவிவகாரங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். புதிய சவால்களில் வெற்றி காண்பீர்கள். இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலையை அடைவீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
குடும்ப உறுப்பினர்களிடையே மதிப்பு அதிகரிக்கும். திட்டமிடப்படாத காரியங்களை ஒன்றுக்கு பலமுறை செய்யவேண்டியிருக்கும். பிரதிபலனை எதிர்பார்த்து காரியங்களை மேற்கொள்வீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
வாழ்க்கையை திட்டமிட்டு வகுத்து அதில் வெற்றியும் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
அன்றாட நடவடிக்கைகளில் பல முக்கிய மாற்றங்களை மேற்கொள்வீர்கள். அத்தியாவசிய பணிகளில் அதிக அக்கறை காட்டுவீர்கள். கடனை அடைப்பீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
நிதி விவகாரங்களில் மகிழ்ச்சி நிலை நிலவும். கடந்தகால செயல்பாடுகளால் வெற்றிக்கனி கிடைக்கும். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
மனபுத்துணர்ச்சியாக உணர்வீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனதிற்கு பிரியமானவவர்களின் சந்திப்பு நிகழும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
நிதி விவகாரங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காததால் மனச்சோர்வு அடைவீர்கள். மனமகிழ்ச்சிக்கு அதிகமாக மெனக்கெட வேண்டிவரும். வாகன போக்குவரத்தில் கவனம் அவசியம்.