Rasi Palan Today 26th January 2019 in Tamil: தீமைகளை அழித்து, நல்லவைகள் என்றும் நிலைநாட்டப்பட அனைவரின் மனதிலும் உறுதி வேண்டும். அந்த உறுதி இறுதியாக இருக்க வேண்டும். எப்பேற்பட்ட சூழலிலும் நெறிதவறாது நடத்தல் என்பது மனித குலத்தில் இருக்க வேண்டிய அடிப்படை தகுதி. தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 26th January 2019 : இன்றைய ராசி பலன், 26 ஜனவரி 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
பணக்கஷ்டம் ஏற்படும். உங்கள் துணையின் ஆதரவு உங்களை வெற்றிகரமாக வழிநடத்திச் செல்லும் உதவும். ஆரோக்கியத்தில் சுணக்கம் ஏற்பட்டாலும், பயப்படும்படி ஒன்றுமில்லை.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
கடுமையான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். ஆனால், மற்றவர்கள் சொல் பேச்சுக் கேட்டு சில இடங்களில் கோட்டை விடுவீர்கள். பொறுமையுடன், நிதானமாக சவால்களை கையாண்டால் முழு வெற்றி உறுதி. ஓரளவிற்கு திருப்தியான நாள் இன்று.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
எந்த பிரச்சனைகள் இருந்தாலும் அதை உட்கார்ந்து பேசினால் எல்லாம் சரியாகும். ஒரு சில அறிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அந்த வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக் கொண்டால் வாழ்க்கையின் வெற்றிப் பாதையில் செல்ல உதவும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
பணியிடத்தில் சகபணியாளர்களுடனான உறவு முறையில் சில குழப்பங்கள் காணப்படும். சின்ன சின்ன விஷயங்களில் கூட பதட்டம் கொள்வீர்கள். உங்கள் குடும்ப விஷயத்தில் உங்கள் துணையுடன் சில சிக்கல்களை சந்திக்க நேரும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
கடுமையாக உழைப்பீர்கள். வெற்றியும் உறுதியாக உங்களை நெருங்கும். ஆனால், சில சிறிய தவறுகளால் கைக்கு எட்ட வேண்டிய வெற்றிக் கனி பறிபோகும். இதற்கு கடவுள் வழிபாடு அவசியம். உடல் நலத்தில் அக்கறை தேவை.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். உங்கள் துணையுடன் நல்லுறவு பராமரிக்க நீங்கள் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். சுமாரான நாள் இது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
சோர்ந்துவிடாமல் தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். வெற்றி பெற வாய்ப்புள்ளது. பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. இது உங்களுக்கு கவலையை அளிக்கும். உங்கள் துணையுடன் சூடான விவாதம் ஏற்படலாம். அதிக பணம் செலவு இருக்கும் நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
அதிக பொறுப்புகள் காரணமாக பணப்பற்றாக்குறை காணப்படும். எனவே சிக்கனத்தை கடைப்பிடிப்பது அவசியம். பணியிடத்தில் அதிகப் பணிச் சுமைக் காணப்படும். இருப்பினும் எதற்கும் அஞ்ச வேண்டாம். முழு அர்ப்பணிப்போடு பணியாற்றுங்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
சில நிதான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். உங்கள் குணாதிசயத்தைப் பார்த்து, உங்களிடம் நெருக்கம் காட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் தொடங்கும் முடிவு இருந்தாலும், ஒரு வாரத்திற்கு ஒத்தி வையுங்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
உங்கள் பால்ய கால நண்பரை சந்திப்பீர்கள். மனம் நிம்மதியாக உணர்வீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதை இனிமேலாவது ஆராயுங்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
சில கடினமான முடிவுகளை இந்த காலக்கட்டத்தில் எடுக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் கிரக நிலைகளை பொறுத்தே இன்ப, துன்பங்கள் நிகழும். அதன்படி, உங்களுக்கு இது சோதனை காலம்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
கதை எழுதுவதில் ஆர்வம் கொள்வீர்கள். பிரிந்து சென்ற உறவுகளிடம் மீண்டும் பேசும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். பணியிடத்தில் எப்போதும் போல சுமூகமான சூழலே நிலவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.