Today Rasi Palan, 26th July 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 26th July 2019: இன்றைய ராசி பலன், ஜூலை 26, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
தெளிவான விடைகள் உங்களுக்கு கிடைக்கும் நாள் இன்று. மனக்குழப்பம் நீங்கும். இந்த முயற்சியை எடுக்கலாமா வேண்டாமா என்ற உங்களது இரட்டை மன நிலைக்கு விடை தருவீர்கள். சொந்தமாக தொழில் செய்வது உங்கள் விருப்பம் என்றாலும், அது குறித்த சில முக்கிய முடிவுகளை இன்று எடுக்கு பட்சத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும். மன நிறைவான நாள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
குறைவான சம்பளத்தில் வேலை கிடைத்திருக்கிறதே என்ற கவலை வேண்டாம். பணியிடத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். புதிய நட்புகளின் அறிமுகம் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அவசர மனநிலையை தவிர்த்தால் ஹார்ட்டுக்கு நல்லதாம், மருத்துவர் சொல்கிறார்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உடல் நிலையில் சுணக்கம் இருக்கும். கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நீங்கள் உபயோகிக்கும் கடுமையான சொற்கள் உங்களை உங்களையே அதிகம் சுடும் என்பதை மறக்க வேண்டாம். தீர்க்கமான சிந்தனைகளுக்கு பிறகு முடிவுகளை எடுங்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
பார்ப்பதற்கு கடினமாக தெரிந்தாலும், உங்களது தனிப்பட்ட திறனால் அதை சாதித்துக் காட்டுவீர்கள். வெளியூர் பயணம் செய்வீர்கள். அது உங்களுக்கு மன நிம்மதியைக் கொடுக்கும். மனைவியுடன் அனுசரித்து செல்வது மேலும் உங்களுக்கு நன்மை பயக்கும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
நல்ல மாற்றங்கள் உருவாகும் நாள். எதற்காகவும் தயங்க வேண்டாம். மேலிடத்தில் இருந்து பணி நிமித்தமாக இருந்த மன அழுத்தம் நீங்கும். மனம் லேசாக உணருவீர்கள். முடிவுகளை நீங்கள் எடுங்கள். யாரிடமும் பகிர வேண்டாம்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபடாமல் உங்கள் வேலையை பார்ப்பதே கன்னி ராசிக்காரர்களுக்கு இப்போதைக்கு சாலச் சிறந்தது. கணவரிடம் சிறிது அட்ஜெஸ்ட் போகலாம். பணியிடத்தில் வழக்கம் போல் உங்கள் ஆளுமை தொடரும். உள்ளுக்குள் நீங்கள் பயப்படுகிறீர்கள் என்பது வெளியில் யாருக்கும் என்றைக்கும் தெரியாது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
அனாவசிய செலவுகளால் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். கடன் தொகை அதிகரிக்கும். குடும்பத்தில் சங்கடங்கள் உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு இன்று சாதகமான செய்தி வரலாம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
மீண்டும் மீண்டும் சரியான முடிவுகளை எடுப்பதில் கோட்டை விடுவீர்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் உங்களுக்கான வாய்ப்பு பறிபோகும் நிலைமை உருவாகலாம். எச்சரிக்கை இந்நேரத்தில் அவசியம். குடும்பத்தினருடன் அதிகம் நேரம் செலவிடுவீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
உங்கள் தேவையறிந்து நடந்து கொண்டால், உங்களைச் சுற்றிக் கொண்டிருக்கும் பாதி தொல்லைகள் அகலும். நீங்களாகவே பிரச்சனைகளை உருவாக்காதீர்கள். உரிய நேரத்தில் எடுத்துக் கொண்ட பணியை முடித்துக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
உங்களுக்கு அதிக உதவி தேவைப்படும் நாள் இது. மனதளவில் உறுதி இல்லாமலும், நம்பிக்கை இல்லாமலும் இருப்பீர்கள். இதனால், உங்கள் பணி பாதிக்கும். நன்ர்பர்களின் ஆலோனைகளை எடுத்துக் கொள்ளுங்கள். விநாயகரை வணங்கிவிட்டு இன்றைய நாளை துவங்குங்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
திருமணம் குறித்த பேச்சு அடுத்தக் கட்டத்திற்கு இன்று நகரும். ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும், மற்றொரு பக்கம் செலவு குறித்து வருத்தப்படுவீர்கள். பணவரவு பெரிதாக இல்லையென்றாலும், சிக்கலான சூழ்நிலைகளை சமாளித்து விடுவீர்கள். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
தொட்டதெல்லாம் வெற்றிப் பெறுவதால், அதீத நம்பிக்கையும், தலைக்கனமும் சூழ்ந்து காணப்படுவீர்கள். நீங்களாக விழித்துக் கொண்டால் நல்லது, இல்லையெனில், காலமும் நேரமும் பாடம் புகட்ட நேரிடும்.