Advertisment

Rasi Palan 26th June: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 26th June Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 25th June: இன்றைய ராசிபலன்

Rasi Palan 25th June: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 26th June 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 26th June 2019: இன்றைய ராசி பலன், ஜூன் 26, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்களின் வீண் பிடிவாதத்தால், சில நல்ல நண்பர்கள் இழப்பீர்கள். சில எமோஷனலான தருணங்களை சந்திக்க வேண்டிய நாள் இன்று. ஆனால், நீங்கள் வழக்கம் போலவே காணப்படுவீர்கள். நிதானம் உங்கள் பலம் என்றாலும், தவறுகளை திருத்திக் கொள்ளாமை உங்களின் பெரும் சிக்கல்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

சிறிய அளவிலான உங்கள் நிதியை மருத்துவ செலவிற்காக செலவிட நேரிடும். அதை உங்களால் எவ்வளவு கவனமாக இருந்தாலும், தவிர்க்க முடியாது. கணிசமாக உங்கள் திட்டங்களை செயல்படுத்த முயற்சி செய்யுங்கள். பிள்ளைகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெற்றோரின் அன்பைப் பெறுவீர்கள். படிப்பில் நல்ல முன்னேற்றம் இருப்பதை நீங்களே உணருவீர்கள. காதல் கைக்கூடும். அத்தியாவசியம் எது என்பதை அறிந்து செயல்பட முயற்சி செய்தால், மேலும் வெற்றிகளை குவிப்பீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

பணம் உங்களை குறிவைத்து வந்து சேரும். நிதி நிலைமையில், நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பொழுதுபோக்கில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். அது உங்கள் தொழிலாக இருக்கும் பட்சத்தில் செல்வம் வந்து சேரும். பொழுது போக்கிற்காக பொழுது போக்கு என்றால், சற்று கவனம் தேவை.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

உங்கள் சார்பாக யாரும் பேச முன்வரமாட்டார்கள் என்ற உண்மையை முதலில் நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். பிறகு, உங்கள் அதிகாரத்தை மற்றவர் மீது செலுத்தத் தொடங்கலாம். கணினி தொடர்பான பணியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அப்படிச் சொல்வதை விட, சூழல் உருவாகும் என்று சொல்லலாம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

கழுத்து வலியால் அவதிப்படுவீர்கள். சிரமங்களை சிறப்பாக கையாளும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் பணி என்னவோ, அதை மட்டும் பார்த்தால் நன்றாக இருக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். குடும்பத்தில் நிலவிய ஒருவித அமைதி விலகி, மகிழ்ச்சி வந்து சேரும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

உங்கள் கடன் எவ்வளவு என்று பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். நிச்சயம் அதில் பாதியாவது நீங்கள் இன்று அடைத்துவிடுவீர்கள். பண வரவு அமோகமாக இருக்கும். செலவு ஒருபக்கம் இருந்தாலும், வரவு ஒரு நூல் அதிகமாக இருக்கும் என்பதால், சிறிய அளவிலான சேமிப்பு கைக்கூடும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

முக்கியமான பணிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுங்கள். இவ்வளவு நாட்களாக தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டு பயனற்ற முடிவுகளை அளித்து கொண்டிருந்தீர்கள். எமோஷனல் முடிவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டாம்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறுவது போல் தெரியும். ஆனால், உங்கள் முயற்சியின் வெளிப்பாட்டில் தான் அது நிறைவேறும். குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு நிச்சயம் உண்டு. சுமாரான நாள் என்றாலும், இறுதியில் வெற்றிக்கனியை சுவைப்பீர்கள். ஆனால், பெரிதாக அதில் இனிப்பு இருக்காது.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

தேர்தலில் வெற்றிப் பெற்றிருந்தால் கூட இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்கள். ஆனால், இன்று உங்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது. பயணங்கள் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். ஆத்மார்த்தமான சில சந்திப்புகளை இன்று அடைவீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

அடுத்து உங்கள் செயல்பாடு என்ன என்பதை முடிவு செய்ய மிகச் சரியான தருணம் இது. எதையும் அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என்று யோசித்துக் கொண்டிருக்காமல், களமிறங்கி செயல்படத் தொடங்குங்கள். உண்மையாக செயல்படுவீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

நீண்ட கால நிவாரணி எது என்பதை இன்று யோசியுங்கள். நிச்சயம் உங்களுக்கு ஐடியா கிட்டும். ஆனால், தவறான முடிவுகளை எடுத்து விடாதீர்கள். மனதிற்கு எது சரி என்று படுகிறதோ, அதைச் செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment