Today Rasi Palan, 26th June 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 26th June 2020: இன்றைய ராசி பலன், ஜூன் 26, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
பொதுவாழ்வில் ஈடுபடுவீர்கள். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். விளைவுகளை எதிர்கொள்ள தயாராவீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் ஆதரவுக்கரம் நீட்டுவர்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
பணியிடங்களில் வேலைப்பளு அதிகமாக இருப்பதால் சோர்வு அடைவீர்கள். எதிர்கால நலனுக்காக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். மனசாட்சியின்படி நடந்து செயல்களில் ஏற்றம் பெறுவீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
விடுமுறையை உங்கள் எண்ணம்போல இனிமையாக கழிப்பீர்கள்.பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
ஷாப்பிங் செய்ய மனம் ஏங்கும். முக்கியமான பொருட்களை மட்டும் வாங்க திட்டமிடுவீர்கள்.மற்றவர்களின் புகழ்ச்சி பேச்சுக்கு மயங்கமாட்டீர்கள். மகிழ்ச்சியான நாள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
கிரகங்களின் சாதகமான பார்வையினால் நேர்மறை எண்ணத்துடன் செயல்படுவீர்கள். எது நடக்கிறதோ அது நன்மைக்கே என்று நினைத்துக்கொள்வீர்கள். தனித்திறமை காட்டுவீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
மற்றவர்களுக்கு வழித்துணையாக இருப்பீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். செயல்களை வழக்கமான நடைமுறைகளிலிருந்து மாற்றி செய்து பலரையும் திரும்பி பார்க்க வைப்பீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
மன அமைதியுடன் இருப்பீர்கள். மற்றவர்களுக்காக புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். பொழுதுபோக்கு விசயங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
குடும்ப உறுப்பினர்களால் மனஅழுத்தம் அதிகரிக்கும். நடைமுறை விசயங்களில் உள்ள சிக்கல்களை தீர்க்க முயல்வீர்கள். காலம் கனியும் என்று காத்திருப்பீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
மனஅழுத்தம் அதிகரிக்கும். பிரியமானவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். புதிய விவகாரங்களில் அதிர்ச்சி தரத்தக்க முடிவுகள் கிடைக்கும் என்பதால் கவனம் அவசியம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
நிதி விவகாரங்களில் திருப்திகரமான நிலை நிலவும். ஷாப்பிங் செல்வதால் மனம் லேசாவதை உணர்வீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
நினைத்த காரியங்கள் எண்ணியபடி ஈடேறும். எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவீர்கள். பலரும் முடிக்க தயங்கும் செயல்களை அனாயசமாக செய்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
மற்றவர்களின் தலையீட்டினால் மனஅமைதி கெடும். மற்றவர்களை கடிந்துகொள்வீர்கள். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil