scorecardresearch

Rasi Palan 26th March 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 26th March 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 26th March 2020
Rasi Palan 26th March 2020

Today Rasi Palan, 26th March 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 26th March 2020: இன்றைய ராசி பலன், மார்ச் 26, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

ஆப்ஷன் வைத்து உங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டாம். அதாவது, இன்று இல்லாவிட்டால் நாளை மேற்கொள்ளலாம் என்று தள்ளிப் போட வேண்டாம். அது உங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

நண்பர்களின் ஆலோசனைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். புதிதாக எந்த ஒப்பந்தங்களிலும் கையெழுத்து இட வேண்டாம். பணி நிமித்தம் சில புதிய அறிமுகம் கிடைக்கும். ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

பெற்றோர்களின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும். சில எளிய செயல்களை செய்ய தடுமாறும் நீங்கள், மற்றவர்களால் செய்து முடிக்க முடியாத கடினமான காரியங்களை சொடுக்கு போடும் நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

தன்மையான வார்த்தைகள் உங்கள் மீதான மதிப்பை மேலும் உயர்த்தும். பண வரவு தடையின்றி இருக்கும். நாள்பட்ட தடைகள் நீங்கும். ஆக்கப்பூர்வமான உங்கள் சிந்தனைகள் உங்களுக்கும் உதவும், மற்றவர்களுக்கும் உதவும். பிரிந்து சென்ற உறவுகள், உங்கள் முயற்சியால் மீண்டும் நெருக்கமாகும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

உடலை ஒருமுறை முழுவதும் பரிசோதனை செய்துவிடுங்கள். சில மருத்துவ செலவுகள் ஏற்படும் முன்னரே, அதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிறியளவு பிரச்சனை வந்து போகும். சுமாரான நாள் உங்களுக்கு.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

கிரக அமைப்பு நிலைப்படி, இன்று தானம் வழங்குங்கள். உங்களின் ஆரோக்யமும், நிதி நிலைமையும் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்ளுங்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

புரமோஷனுக்கு வாய்ப்புள்ளது. மேலதிகாரிகளுடன் நல்ல பெயரை பெறுவீர்கள். யாரையும் புண்படுத்த தெரியாத உங்களுக்கு வெற்றி தேடி வரும். இன்பமான நாள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

சிலரை புரிந்து கொள்வது மிகக் கடினம். இன்றைய நாள் உங்களுக்கு அப்படியானதாக இருக்கப் போகிறது. எங்கிருந்து பிரச்சனை வருகிறது என்று தெரியாத அளவிற்கு இன்னல்கள் ஏற்படலாம். ஆனால், அவற்றை உங்கள் சாதுர்யத்தால் முறியடிப்பீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

இன்று உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும். கடினமான பணிகளைக் கூட எளிதாக குறித்த நேரத்திற்கு முன் முடிப்பீர்கள். இன்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யம் அளவிற்கு பணப்புழக்கம் காணப்படும். உங்கள் சேமிக்கும் திறன் அதிகரிக்கும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாள். இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். முக்கிய முடிவுகள் எடுக்க இது உகந்த நாள். இன்று நிதிநிலையில் நம்ப முடியாத அளவு பலன் இருக்கும். உங்கள் சொத்துக்கள் அதிகரிக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

வாழ்வில் உங்கள் பொறுப்புகள் அதிகமாகும். இது உங்களுக்கு சிறிது பதட்டத்தை ஏற்படுத்தும். குழப்பம் ஏற்படாதபடி தெளிவான இலக்குகளை அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்க பரிகாரம் மேற்கொள்ளவேண்டியிருக்கும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

பழைய நண்பர்களை இன்று சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். விநாயகரை வழிபட்டு இன்றைய நாளை துவங்குங்கள். சரியாக முடிவெடுக்கப்படாத செயல்பாடுகளை நிறுத்தி வையுங்கள். அதில் உங்களுக்கே தோல்வியே மிஞ்சும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Horoscope news download Indian Express Tamil App.

Web Title: Rasi palan 26th march 2020 today rasi palan

Best of Express