Rasi Palan Today 26th November 2018 in Tamil : வாழ்வில் நமது ஒவ்வொரு செயலுக்கும் பின் விளைவுகள் உண்டு. நல்ல செயல்களுக்கு நல்ல விளைவுகள், தீய செயல்களுக்கு தீய விளைவுகள். இதுவே சத்தியம். இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தருகிற ராசிபலன் பகுதியை ஒவ்வொரு நாளும் வாசகர்கள் இங்கு காணலாம்.
Rasi Palan 26th November 2018 : இன்றைய ராசி பலன், 26 நவம்பர் 2018
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
வாழ்க்கையில் நீங்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய நேரமிது. உங்களை சுற்றி தோல்விகள் விதைக்கப்பட்டாலும், அதனை தகர்த்தெறிய கடுமையாக முயற்சி செய்வீர்கள். சுமாரான நாளாக இருந்தாலும், அதனை வெற்றிகரமாக்க நீங்கள் நினைத்தால் முடியும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
காதலித்து வேதனையில் உள்ளீர்களா? இனி கவலை வேண்டாம். உங்களை புறக்கணித்தவர்கள் உங்களை தேடி வருவார்கள். குடும்ப உறவில் நெருக்கம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உங்களுக்கு மாலை போடும் அளவிற்கு பணியிடத்தில் சிறப்பாக வேலை செய்வீர்கள். மேலதிகாரிகளிடம் நல்ல பெயரும் எடுப்பீர்கள். ஆனால், அந்த உழைப்பால் யாருக்கு உண்மையில் லாபம் என்பதை தெரிந்து கொண்டால் நீங்கள் புத்திசாலி.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
தேவையில்லாத பேச்சுகளுக்கும், கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். உங்களின் வீக் பாயிண்ட் எது என்பதை தெரிந்து நெருங்குவார்கள். ஏமாற வேண்டாம். நீங்கள் நீங்களாக இருப்பது தான் சிறந்தது.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
தோல்வியில் இருந்து பாடத்தை கற்றுக் கொள்வீர்கள். அதேசமயம், அதே தவறை மீண்டும் செய்யத் துணிவீர்கள். குடும்ப உறவில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களின் படிப்புத் திறன் அதிகரிக்கும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வீடு, தோட்டம் வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், வெற்றிகள் தானாகவே வசப்படும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
தெளிவான இலக்கை நிர்ணயித்து, அதை நோக்கி பயணம் செய்வீர்கள். இடையில் சில தடைகள் ஏற்பட்டாலும், துடைத்துச் செல்லும் ஆற்றலைக் கொண்டிருப்பீர்கள். இருப்பினும், தோல்விகள் மிஞ்சும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
யாரும் நமது திறமையை கண்டுக் கொள்ளவில்லையே என்று நினைக்க வேண்டாம். கூடிய விரைவில் வெற்றி உங்களைத் தேடி வரும். இருப்பினும், அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். சுமாரான நாள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
கனிவான பேச்சுக்கள் உங்களின் தரத்தை உயர்த்தும். மற்றவர்களுக்கு உங்கள் மீது மரியாதையை ஏற்படுத்தும். பெண்களுக்கு உடல்நிலையில் சில தொந்தரவுகள் ஏற்படும். மருத்துவ செலவுகள் ஏற்படும் நாள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
விளையாட்டுக்கு கூட விளையாட்டாக இருக்காதீர்கள். உங்கள் வாழ்க்கை படலத்தில் மிகவும் சீரியஸாக இருக்க வேண்டிய கட்டங்கள். இலக்கு என்ன என்பதை யோசித்து செயல்படுங்கள். முடிவுகளை உடனுக்குடன் மாற்றாதீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பீர்கள். அது உங்களை மேலும் வலிமையான நபராக மாற்றும். மன அழுத்தங்கள் குறையும். சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
உங்களுக்கு எது நல்லது என்று தோன்றுகிறதோ, அதை விடாப்பிடியாக நின்று பெற வேண்டியது உங்கள் கடமை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வெற்றிகரமான நாள்.