/tamil-ie/media/media_files/uploads/2019/04/z396.jpg)
Rasi Palan 27th April: இன்றைய ராசிபலன்
Today Rasi Palan, 27th April 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 27th April 2019 : இன்றைய ராசி பலன், ஏப்ரல் 27, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
உங்களின் ஆதரவாளர்கள் தொடர்ந்து உங்கள் பக்கமே இருப்பதால், இன்றும் உங்களுக்கு ஒரு நல்ல நாள் தான். இருப்பினும், கடந்த காலத்தில் நீங்க ஆற்றிய பணி முறையை இப்போது மாற்றிக் கொள்வது நல்லது. ஏனெனில், உங்களது செயல்களில் இப்போது மாற்றம் தேவை.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
ரிஷப ராசி நேயர்களுக்கும் கடந்த கால தொல்லைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உங்களுக்கு சரிவராத பணிகளில் இருந்து நீங்கள் விடைப் பெற்றுக் கொள்வது சிறந்தது. மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள சிறு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அதை பயன்படுத்துவது உங்கள் கைகளில் உள்ளது.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
இன்று உங்களுக்கு சிறியளவில் பணத்தட்டுப்பாடு ஏற்படும். இதனால் சில சிக்கல்களும் உண்டாகலாம். இருப்பினும், நீண்ட நாட்களாக உங்களைச் சுற்றி வந்த இன்னல்கள் அகலும். அதனால் மனநிம்மதி உறவாகும். கடமையே கண்ணாக இருப்பீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உங்களுக்கு தொல்லை கொடுப்பதற்கு என்றே சிலர் இன்று வரிசைக் கட்டி நிற்பார்கள். அதை நினைத்து பெரிதாக கவலை கொள்ள வேண்டும். இதுவும் கடந்து போகும். உடல் நலத்தில் சற்று அக்கறை தேவை. முதுகு வலியால் அவதிப்படுவீர்கள். சுமாரான நாள் இன்று.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
சிறிய தோல்விகள் உங்களை தடுமாற வைக்கும். அதற்காக நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். இன்னும் சில நாட்களில் முன்னேற்றத்தை காண்பீர்கள். நீங்கள் இழந்த வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
குடும்பத் தலைவிகளின் உடல்நிலையில் அக்கறை தேவை. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். குடும்ப உறவில் ஏற்பட்ட விரிசல்கள் சரியாகும். மற்றவர்களிடம் குறை பேசுவதை தவிர்க்கவும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
கவலைகள் விலகும் நேரம். ஊக்குவிப்புகள் அதிகம் கிடைக்கும். தன்னம்பிக்கையை கொஞ்சம் அதிகப்படுத்தினால் வெற்றிகள் வசப்படும். மருத்துவ ரீதியாக செலவுகள் உண்டாகும். ஆரோக்யத்தை பேணி காக்க வேண்டிய நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
இன்று பணப்புழக்கம் மிதமாகக் காணப்படும். பணத்தை தக்க வைத்துக்கொள்வது கடினமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல் நலத்திற்காக செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். திட்டமிட்டு நேரத்துடன் பணி செய்வதன் மூலம் தவறுகளை தவிர்க்க முடியும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
இன்று உணர்ச்சிப் பூர்வமாக இருப்பதை விட்டுவிட்டு யதார்த்தமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களை பாதிக்கக்கூடிய எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். உங்கள் வேலை சம்பந்தமாக நீங்கள் பயணம் செய்ய நேரிடலாம். அது பயனுள்ளதாகவும் வெற்றிகரமாகவும் அமையும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
இன்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். உங்கள் இலக்குகளை அடைய போராட வேண்டியிருக்கும். பொறுமையும் அமைதியும் தேவை. பணிகளில் சற்று பின்தங்கியிருப்பீர்கள். இதனால் உங்கள் மேலதிகாரிகளிடத்தில் நல்ல பெயரெடுக்கும் வாய்ப்பை இழப்பீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
உங்களுடைய உறுதியான முயற்சியின் மூலம் இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமன நாளாக அமையும். இன்று வெற்றியை சந்திப்பீர்கள். உங்கள் முயற்சிகளின் மூலம் பல சாதனைகளைச் செய்வீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
இன்று காதலர்களுக்குள் கருத்து வேறுபாடு காணப்படும். இது நீங்கள் தகவல் பரிமாற்றத்தில் செய்யும் சிக்கல்கள் காரணமாக ஏற்படலாம். இன்று நிதிநிலைமை லாபகரமானதாக இல்லை. வரவைவிட செலவு அதிகமாக காணப்படும். பணப்பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.