Advertisment

Rasi Palan 27th June: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 27th June Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today rasi palan, rasi palan july 2nd, இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan july 2nd, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 27th June 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 27th June 2019: இன்றைய ராசி பலன், ஜூன் 27, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்களுக்கு எது நல்லது என்று தோன்றுகிறதோ, அதை விடாப்பிடியாக நின்று பெற வேண்டியது உங்கள் கடமை. உடல் ஆரோக்கியத்தில் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனம் தேவை. சுமாராக இருந்தாலும் மகிழ்ச்சியான நாள் இன்று.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

நண்பர்களின் முட்டாள்த்தனமான யோசனைகளை ஒதுக்கி வையுங்கள். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். உங்கள் இலக்கை நோக்கி முன்னேறி சென்றுக் கொண்டே இருங்கள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

நீங்கள் எதிர்பார்த்த தருணம் கிடைப்பதில் சில காலதாமதம் ஏற்பட்டாலும் இறுதியில் சுபம் உண்டாகும். உங்கள் திட்டங்கள் செயல் வடிவமாக மாறும் தினம் இது. கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்ததால், பக்குவத்துடன் செயல்பாடுகளை அணுகுவீர்கள். தோல்விகளையும் கடந்து செல்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

தவறுகளில் இருந்து பாடம் கற்பீர்கள். முன்னேற்றமான நாட்களை இனி சந்திப்பீர்கள். தோல்விகள் உங்களை மேலும் வலிமையான நபராக மாற்றும். மன அழுத்தங்கள் குறையும். சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

நீங்கள் ஒதுக்கினாலும் பிரச்சனைகள் உங்களை ஒதுக்காது. சில முயற்சிகளில் சறுக்கல்களை சந்திப்பீர்கள். சுயக்கட்டுப்பாடு இன்றி சிரமப்படுவீர்கள். விநாயகர் வழிபாடு இன்னல்களை குறைக்கும். தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால், சில காலத்திற்கு ஒத்தி வையுங்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

சூரியன் உங்கள் துணை நிற்பதால், வெற்றி வசப்படும். முன்னர் இருந்த சில தடுமாற்றங்கள் வெகுவாக குறையும். சுய ஆர்வம் கொண்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அதுவே உங்களை முன்னேற வைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

சந்திரன் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், தொட்ட காரியங்கள் துலங்கும். ஆனால், மற்ற கிரக நிலைகளின் அமைப்புகளால் தெளிவற்ற மனநிலை இருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதி தேவை. சில தடுமாற்றங்கள் ஏற்படும். இருப்பினும் சமாளித்து விடுவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உங்களைச் சுற்றி நல்ல மனதுடையவர்கள் அதிகம் இருப்பதால், நேர்மறையாகவே சிந்திப்பீர்கள். அது உங்கள் செயல்பாடுகளை நகர்த்திச் செல்லும். உங்கள் எண்ணங்களே உங்களது முடிவாக இருக்கும். உங்கள் துணைக்கு பிடித்தவாறு நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்கள் கருத்தில் உறுதியாக இருப்பீர்கள். பெரும்பாலான நேரத்தில் அந்த உறுதி வெற்றியையும், பெருமையையும் கொடுக்கும். விரும்பிய பெண்ணையே வாழ்க்கைத் துணையாக ஏற்பீர்கள். மகிழ்ச்சியான இல்லறம் நீடிக்கும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உடல் நலத்தில் அக்கறை தேவை. குடும்பத்தில் அன்பை விதைக்க முயற்சி செய்யுங்கள். காதல் கைகூடும். வெளிநாடுகளில் வேலைக்கு ஏற்பாடு செய்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

எதையும் யோசித்து முடிவெடுங்கள். எடுத்தோம், கவிழ்த்தோம் என்பது உங்கள் கதைக்கு உதவாது. உங்கள் முடிவுகளை சரியான நேரத்தில் வெளியிடுங்கள். நண்பர்களின் ஆதரவு இருக்கும். உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

இன்று பலன்களில் ஏற்றத்தாழ்வு காணப்படும். செயல்கள் சுமுகமாக நடைபெற அனுசரித்து நடக்க வேண்டும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. பணத்தை கையாள்வதை கடினமாக உணர்வீர்கள்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment