Rasi Palan 27th May: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 27th May Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 27th May Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 27th May: இன்றைய ராசிபலன்

Rasi Palan 27th May: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 27th May 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 27th May 2019 : இன்றைய ராசி பலன், மே 27, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

தொழில் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிக நீண்ட கால மாற்றங்களை ஏற்படுத்தும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் காணப்படும். நீங்கள் பயனுள்ள முடிவுகளை எடுக்க இயலும். குறுகிய காலத்திற்குள் நீங்கள் உங்கள் பணிகளை திறமையாக முடிப்பீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

நெருங்கிய உறவுகள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். இன்று பணிகள் இறுக்கமாக காணப்படும். அதனை நீங்கள் அமைதியான முறையில் எற்றுக் கொள்ள வேண்டும். திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். அதிகரிக்கும் செலவினங்களை நீங்கள் எதிர்கொள்ள நேரும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உங்களுக்கு தேவையான ஒன்று, தேவையான நேரத்தில் கிடைக்கும். சில சமயம் அது கிடைக்காமல் கூட போகலாம். நிலைமை உங்கள் கையைவிட்டு போனாலும், நீங்கள் அதை நிதானமாக கையாள வேண்டும். அறிவார்ந்த முறையில் பணி செய்தால் மட்டுமே வெற்றி காண இயலும். அதன் மூலம் நீங்கள் உங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

இன்று நீங்கள் உங்கள் உண்மையான ஆற்றலை அறிந்து கொள்வீர்கள். உங்களின் தகவல் தொடர்பு திறமைக்கான பாராட்டு பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களின் நம்பிக்கையான மனநிலை காரணமாக நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

உங்கள் செயல்களை சுமூகமாக மேற்கொள்ள நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் நம்பிக்கை இழக்க நேரலாம். நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சமூகம் சார்ந்த பொறுப்புகளை ஏற்கும் வாய்ப்பு ஏற்படும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

மிகவும் கவனமுடன் இருக்க வேண்டிய நாள் இது. செலவு, குடும்பம், வேலை என அனைத்திலும் பொறுப்பாக இருக்க வேண்டிய நேரம் இது. வாழ்க்கையை எளிதாக கடந்து செல்ல எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதும் அவசியம்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

கோபத்தைக் குறைத்துக் கொள்வது உங்களுக்கும் நல்லது, உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லது. நண்பர்களின் ஆலோசனைகளை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம். சுய சிந்தனையுடன் செயல்படுங்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

மருத்துவர்களிடம் செல்லும் நிலை ஏற்படும். எதிர்காற்றில் பயணம் செய்வதை முடிந்தளவு தவிருங்கள். மனைவியிடம் அன்பு காட்டுங்கள். பெற்றோர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

மகிழ்ச்சிகரமான நாள். வெற்றி உங்களைத் தேடி வரும். பிள்ளைகளால் அலைச்சல் உண்டாகும். சேமிப்பு கை கொடுக்கும். காதல் கைகூடும். குடும்ப உறவில் நிம்மதி நிலவும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

சில தடைகளுக்குப் பின் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். செயல்களின் முன்னுரிமையை உணர்ந்து அதன்படி வினையாற்றுங்கள். இன்று பணவரவுடன் செலவும் சேர்ந்து காணப்படும். சீரான நிதிநிலைமையை தக்கவைத்துக் கொள்ள திட்டமிடல் அவசியம்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

பணிச் சூழல் சவால்கள் நிரம்பியதாக இருக்கும். உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் விவாதத்தில் ஈடுபடுவீர்கள். வேலை இழப்பிற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. பாதுகாப்பின்மை உணர்வு மேலோங்கி இருக்கும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

வெகுச் சிலரால் மட்டுமே உங்களை புரிந்து கொள்ள முடியும். அவசர கோலத்தில் எந்த முடிவையும் எடுக்காதீர்கள். பணவரவு சீராக இருக்கும். நிம்மதியான நாள் இது.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: