Today rasi palan, rasi palan May 27th, இன்றைய ராசிபலன்
Today Rasi Palan, 27th May 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
Rasi Palan 27th May 2020: இன்றைய ராசி பலன், மே 27, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
Advertisment
Advertisements
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். பிரயாணங்களுக்காக திட்டமிடுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
முக்கியத்துவம் அறிந்து செயல்படுவீர்கள். உறவினர்களிடம் நட்பு பாராட்டுவீர்கள். நண்பர்களுடன் அளவளாவி மகிழ்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
நிதி விவகாரங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மனக்குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். விலையுயர்ந்த பொருட்களை பாதுகாப்பதில் அதிக கவனம் அவசியம். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உங்களின் மதிப்பை தாங்களே அறிவீர்கள். உண்மைக்கு புறம்பான செயல்களில் மனம் செல்லும் என்பதால் கவனம் அவசியம். கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
பிறரை மகிழ்வித்து மகிழ்வீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
முக்கிய விவகாரங்களில் தீர்வு காண முயல்வீர்கள். பொழுதுபோக்கு விசயங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வாகன போக்குவரத்தில் கவனம் அவசியம்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
கடந்தகால நற்செயலுக்கான பலனை அனுபவிப்பீர்கள். அவசரப்பட்டால் எதுவும் நிகழாது என்பதை உணர்வீர்கள். தாமதமின்றி காரியத்தை நிறைவேற்ற துடிப்பீர்கள். நம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
எதையும் ஒரு கை பார்த்து விடலாம் என்று இருப்பீர்கள். முக்கியமான வாய்ப்புகளை தவற விடும் நிலை இருப்பதால் கவனம் அவசியம். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மற்றவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
முன்னேற்றப்பாதையில் தடைக்கற்கள் தோன்றி மறையும். வெற்றிப்பாதையில் சிங்கநடை போட்டு முன்னேறுவீர்கள். மற்றவர்கள் செய்ய முடியாத விசயங்களை அனாசயமாக செய்து முடித்து காட்டுவீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
மகிழ்ச்சியான நாள். நண்பர்களால் நற்பலன்களை பெறுவீர்கள். தனிமையில் இருப்பதாக உணர்வீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை கழிக்க விரும்புவீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
மற்றவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பணியிடங்களில் ஊழியர்களிடம் நட்பு பாராட்டுவீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு செவிசாய்ப்பீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். விளைவுகளை அறிந்து பணிகளில் ஈடுபடுவது நல்லது. தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கும். மகிழ்ச்சியான நாள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil