Today Rasi Palan, 28th August 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 28th August 2020: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 28, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
பணி தொடர்பாக திட்டமிடுகிறீர்கள் எனில், அடுத்த சில நாட்களுக்கு அந்த திட்டமிடலை நீங்கள் பின் தொடரலாம். உங்களது அடுத்தக் கட்ட நகர்விற்கு இன்றிலிருந்து சில நாட்கள் அனுகூலமாக இருக்கும். உங்களது நேர்மையான குணத்தை உங்களுக்கு நெருக்கமானவர்கள் நிச்சயம் பாராட்டுவார்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட தேவையில்லை. உங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் பணியை சிறப்பாக செய்தால், அதுவே வெற்றியைத் தேடி தரும். அதேசமயம், இன்று சில மோசமான தருணங்களையும் சந்திக்க வாய்ப்புள்ளது.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், நேற்றைப் போல இன்றும் உங்களுக்கு நிம்மதியான நாள் தான். இன்றும் வெற்றிகரமான முடிவுகளை எடுப்பீர்கள். செயலையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். தாய் வழி உறவில் இருந்து நன்மைகள் வந்து சேரும். நிதி நிலைமையில் லேசான சறுக்கல் இருந்தாலும் சுணக்கம் இருக்காது.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
காதலுக்கும், அன்புக்கும் அதிபதியான வெள்ளி, மனஅழுத்தம் கொண்ட மன நிலையில் இருக்கும் உங்களை விடுவித்து நிம்மதியான நாட்களுக்கு அழைத்துச் செல்வார். யாரையாவது நீங்கள் எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொண்டால், அன்றே மன்னிப்பு கேட்க வேண்டும். அடுத்தவாரம் கேட்கக் கூடாது.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
உங்கள் பணிகளில் உங்களை அறியாமலேயே பெரிய முன்னேற்றத்தை காண்பீர்கள். அது உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். ரகசியமான திட்டங்களை தீட்டி மற்றவர்களிடம் அம்பலப்படுத்துவதை நீங்களே வாடிக்கையாகக் கொண்டிருப்பீர்கள். இதற்கு எதற்கு ரகசிய திட்டம்?
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
உங்களை பழைய நண்பர்களை பார்க்கும் வாய்ப்பு கிட்டும். பார்க்கும் அனைவரையும், அனைத்து செயல்களையும் சந்தேக்கப்பட வேண்டாம். அதேபோல், நீங்கள் செய்யும் செயலைக் கூட வெற்றிப் பெறுமா என சந்தேகிக்க வேண்டாம். அதுவே உங்கள் தோல்விக்கு முதல் காரணமாகிவிடும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
எதிர்பார்க்காத வரவுகள் உங்களை மகிழ்விக்கும். அதேசமயம், சந்திரன் உங்கள் ராசியில் சில குழப்பங்களை விளைவிக்கும். எனவே, கடவுள் வழிபாடு அவசியம். குறைந்த பட்சம் உங்களைச் சுற்றும் சிறிய பிரச்சனைகளாவது அகலும். உங்கள் குடும்பத்தினரோடு சேர்ந்து ஆலோசித்து செயல்படும் பட்சத்தில், சில தொல்லைகளை தவிர்க்கலாம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
வலிமையான கிரக நிலைகள் நீடிக்கும். அதேபோல், உங்களது முன்னேற்றத்திலும் எந்த குறையும் இருக்காது. சில சிக்கல்கள் நீடித்தாலும், அடுத்தடுத்த வாரங்களில் அதுவும் குறைந்து போகும். சனிக் கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு விளக்கு போட்டு வணங்கி வாருங்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
நிதி நிலைமை மேலும் மோசமாகும். வீட்டின் கூரையின் மேல் உட்கார்ந்து தீர்வு என்ன என்பதை யோசிப்பீர்கள். ஆனால், செயலற்ற தன்மையில் இருக்கும் நீங்கள் பெரிதளவில் ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டீர்கள். இருப்பினும், நீங்கள் அதிகம் விரும்பும் நபருக்காக கணக்கு பார்க்காமல் செலவு செய்வீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
உங்கள் ஆற்றலை எங்கே பயன்படுத்த வேண்டும் என சிந்திக்க வேண்டும். உண்மையை வைத்து மட்டும் நிகழ் கேள்விகளுக்கு விடை காண முடியாது. பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
குழப்பங்களும், ஆர்வத் தூண்டுதலும் ஒரு சேர கலந்திருக்கும். இதுவே, உங்களை உடனே முன்னேற்றிக் கொள்ள தேவையான அடிப்படை என்பதை சிந்திக்க வைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தோல்வியுற்றாலும், அதை நினைத்து வருந்த வேண்டாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil