Rasi Palan 28th February 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 28th February 2020: தேக்கநிலை நீடித்தால் கவலை வேண்டாம். விரைவில் அனைத்தும் நலம் பெறும். உங்களுக்காக நிமிடங்களும், நொடிகளும் வரிசைக்கட்டி வந்து கொண்டிருக்கின்றன

Rasi Palan 28th February 2020: தேக்கநிலை நீடித்தால் கவலை வேண்டாம். விரைவில் அனைத்தும் நலம் பெறும். உங்களுக்காக நிமிடங்களும், நொடிகளும் வரிசைக்கட்டி வந்து கொண்டிருக்கின்றன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 28th February 2020 rasi palan today

Rasi Palan 28th February 2020 rasi palan today

Today Rasi Palan, 28th February 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 28th February 2020 : இன்றைய ராசி பலன், பிப்ரவரி 28, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

Advertisment
Advertisements

கல்வியின் அருமையை புரிந்து கொள்ளும் காலக்கட்டம் இது. வெளிநாடு செல்லும் வாய்ப்பு மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. அதேசமயம், கடல் கடந்து செல்லாத வகையில் புதிய வேலை வாய்ப்புகள் உங்கள் கிடைக்கும் சூழல் ஏற்படும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

யாரையும் முற்றிலுமாக நம்ப வேண்டாம். பணம் கொடுக்கல், வாங்கலில் மனஸ்தாபம் ஏற்படும். பழைய சிக்கல்கள் இப்போது மீண்டும் துரத்தும். வேலைவாய்ப்பில் முன்னேற்றம் ஏற்படும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

யார் என்ன சொன்னாலும் உங்கள் பணியை செய்து கொண்டே இருங்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். மனைவியின் அன்பான வார்த்தைகள் உங்களை உற்சாகப்படுத்தும். நம்பிக்கையே உங்கள் பலம். அதனை விட்டு விடாதீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உடல்நலத்தில் இன்னும் கவனம் வேண்டும். உடல் சார்ந்த உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தோல்விகளை அவமானம் என்று எண்ணி வருந்த வேண்டாம். யாருக்கும் வெற்றி, தோல்வி நிரந்தரமல்ல. விநாயகரை இன்று வழிபடுங்கள். ஜெயம் உண்டாகும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

பணி நிமித்தமாக கடல் கடந்து செல்லும் வாய்ப்பு ஏற்படும். சில மருத்துவ செலவுகள் ஏற்படும் முன்னரே, அதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிறியளவு பிரச்சனை வந்து போகும். கடுமையான வார்த்தைகள் உங்களை நிலை குலைய வைக்கும். கிரக நிலைகள் மேம்பாட்டில் சிறிய சுணக்கம் உள்ளது. சுமாரான நாள் உங்களுக்கு.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

தானம் வழங்குங்கள். உங்களின் ஆரோக்யமும், நிதி நிலைமையும் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்ளுங்கள். கைகளால் செய்யப்பட வேண்டிய வேலைகளை, கைகளால் தான் செய்ய வேண்டும். காலால் செய்யலாம் என நினைக்கக் கூடாது. திருப்தியான நாள் இது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். மேலதிகாரிகளுடன் இணக்கமான உறவை கடைபிடிப்பீர்கள். ஆஞ்சநேயர் வழிபாடு இன்று உங்களுக்கு நல்ல பலனைத் தேடித் தடு. இன்பமான நாள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உஷாராக இருக்க வேண்டிய நாள். உங்கள் இலக்குகளை அடைய போராட வேண்டியிருக்கும். பொறுமையும் அமைதியும் தேவை. வெற்றிக்கான நாள் வெகு தொலைவில் இல்லை. நிதிநிலைமை கையை சுடும். அதிலும் கவனம் தேவை.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

நிச்சயமற்ற தன்மை நிலவினாலும், விரைவில் அந்த நிலை மாறும். வரவேண்டிய கடன்கள் திரும்ப வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் உடல்நலத்தில் அக்கறை தேவை.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இதனால், கடினமான பணிகளையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். யாருக்காகவும் மற்றவர்களிடம் வாக்கு கொடுக்க வேண்டாம்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

வெற்றி தான் உங்கள் இலக்கு. அதற்காக எப்பேற்பட்ட தடைகள் வந்தாலும் உடைத்தெறியும் ஆற்றல் உங்களிடம் இருக்கும். பெரிதாக வெற்றி கிட்டவில்லை என்றாலும், சோடை போக மாட்டீர்கள். குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

தேக்கநிலை நீடித்தால் கவலை வேண்டாம். விரைவில் அனைத்தும் நலம் பெறும். உங்களுக்காக நிமிடங்களும், நொடிகளும் வரிசைக்கட்டி வந்து கொண்டிருக்கின்றன. புலம்பல் எதற்கும் தீர்வாகாது. மனசுக்கு பிடித்தவர்களிடம் மன்னிப்பு கேட்பதில் ஏன் இத்தனை தயக்கம்? சரண்டர் ஆயிடுங்க. மகிழ்ச்சி தருணங்களை அனுபவிக்கலாம்.

Rishabam Rasi Palan Meenam Rasi Palan Kanni Rasi Palan Midhunam Rasi Palan Simmam Rasi Palan Kumbam Rasi Palan Magaram Rasi Palan Dhanusu Rasi Palan Viruchigam Rasi Palan Thulam Rasi Palan Kadagam Rasi Palan Mesham Rasi Palan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: