Today Rasi Palan, 28th June 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 28th June 2019: இன்றைய ராசி பலன், ஜூன் 28, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
தன்னம்பிக்கையை இழந்தாலும் வெற்றியை நோக்கியே பயணிப்பீர்கள். சிறிது காலத்திற்கு இந்த சறுக்கல் இருக்கும். மீண்டும் புத்துயிர் பெற்று விரைந்து முன்னேறுவீர்கள். சுமாரான நாள் இது.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
செயலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கவனக்குறைவு உங்கள் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதை ஓவர்கம் செய்துவிட்டால், மிகப்பெரிய வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும். அதில் உங்களால் ஜொலிக்க முடியும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
இன்று உங்கள் செயலுக்கு பாராட்டு கிடைக்கும் நாள். அதேசமயம், உங்கள் பொறுப்பும், கடமையும் மேலும் அதிகரித்திருக்கிறது. உங்கள் வீட்டில் உள்ளோரின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
பிரச்சனைகள் சூழும். சுற்றி இருப்பவர்களால் சிக்கல் உருவாக வாய்ப்புள்ளது. இருப்பினும், அவற்றினை வெல்ல கடினமாக முயற்சி செய்வீர்கள். வெற்றி கிடைக்காவிட்டாலும் தோல்வி உங்களை பாதிக்காது.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
மேலே எழும்பி முன்னுக்கு வர வேண்டுமே என்று நினைத்தாலும், உங்களுக்கு எதிராக சில அலைகள் இருக்கும். உங்கள் நண்பர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நிதிநிலைமை இன்று எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
பணியிடத்தில் நல்ல பெயர் வாங்க முயற்சி செய்வீர்கள். அதில் ஓரளவு வெற்றியும் காண்பீர்கள். பண தேவைக்காக, உங்களது சிந்தனைகள் உங்களை விட ஸ்மார்ட்டாக இருக்கும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
தேடி வந்து மரியாதை கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பீர்கள். சிலவற்றிற்காக சிலவற்றை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளும் சூழல் உருவாகும். உங்களுக்கே தெரியாமல், பின்னால் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
உங்கள் நிலையை அடைந்த பின்னர், அடுத்த இலக்கை நிர்ணயித்து பயணம் செல்வீர்கள். சில பேர், சில சமயம் உங்களை கன்வின்ஸ் செய்ய முயற்சி செய்வார்கள். ஆனால், அதில் எந்த பலனும் இருக்காது. அமைதி வேண்டும் என்றால், அதற்காக நீங்கள் தான் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
உங்களைத் தேடி நீங்களே போக வேண்டிய நாள். இது சற்று கடினமாகத் தான் இருக்கும். ஆனால், உங்கள் மீது மற்றவர்கள் வைக்கும் விமர்சனத்திற்கு பதில் அளிக்க இந்த முயற்சி நிச்சயம் தேவை.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
மற்றவர்களுடன் சேர்ந்து வெற்றியைக் கொண்டாட காத்திருப்பீர்கள். மற்றவர்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்டால் ஏற்றுக் கொள்வீர்கள். ஆனால், சந்தேகமே வேண்டாம்.. நீங்கள் தான் அனைத்திலும் அதிகாரம் செலுத்தப் போகிறீர்கள் என்று.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
மோசமான தருணங்களை எப்படி கையாள வேண்டும் என்பதை கற்று உணருவீர்கள். அதுவே உங்களுக்கு பயன் அளிக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும் யோகம் உண்டு.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
மற்றவர்கள் உங்களை பற்றி என்ன நினைப்பார்கள் என்று கவலைப்பட வேண்டாம். குடும்பத்தில் நிம்மதி நிலவும். சுற்றி வரும் சிக்கல்கள் அகலும். நிம்மதியான நாள்.