Rasi Palan Today 28th March 2019 in Tamil: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 28th March 2019 : இன்றைய ராசி பலன், மார்ச் 28, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
நிலையான முடிவு எடுக்க தடுமாறுவீர்கள். கிரக அமைப்புகள் உங்களை தடுமாற வைக்கும். உங்கள் வீட்டிற்கு அருகில் என்ன கோயில் இருந்தாலும், அங்கு சென்று ஏதாவது ஒரு இஷ்ட தெய்வத்துக்கு விளக்கு போடுங்கள். செலவுகளை கட்டுப்படுத்த திட்டமிட்டு செயல்படுங்கள். சுமாரான நாள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
இன்று உங்களுக்கு சிறந்த நாளாகும். உங்களது கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தில் செலவு செய்வீர்கள். வெற்றிகரமான நாள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உங்களது சிறப்பான செயல்களில் சிலவற்றிற்கு அங்கீகாரம் கிடைக்காமல் போனாலும், நீங்களே உங்களை போற்றிக் கொள்ளலாம். விரைவில் உங்களுக்கான நாள் வரும். பணிச் சுமை உங்களை சோர்வடைய வைக்கும். உங்கள் திடமான மனமே உங்களுக்கான நிவாரணி.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
கடின உழைப்பும், குழப்பமும் சரியான விகிதத்தில் கலந்திருக்கும். வெளியூர்களுக்கு பயணம் செல்ல நேரிடும். வாங்கிய கடனை அடைப்பீர்கள். நிம்மதி நிலவும். சமீப நாட்களில் நிலவி வந்த சோகம் மறையும். நிறைவான நாள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
மகிழ்ச்சியான நாள் இன்று. புதிய தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ள இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வெளியிடங்கள் மற்றும் விருந்துகளுக்கு செல்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றத்தை காண்பீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
வீடு, நிலம் போன்றவற்றை விற்க முடியாமல் தடுமாறும் உங்களுக்கு, இன்றைய நாள் நல்ல செய்தியை கொண்டு வரும். ஆவேசமாக நீங்கள் எடுக்கும் முடிவுகளில் தோல்வி ஏற்பட வாய்ப்புள்ளது. திருமண யோகம் கிட்டும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
இன்று பணத்தை சிறப்பாக பராமரிப்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் பணம் சம்பாதிக்க முயற்சிகள் செய்யலாம். உடற்பயிற்சி மூலம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருங்கள். பிரார்த்தனை சிறந்த பலன் தரும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
பணிகள் இறுக்கமாக காணப்படும். பணிச் சூழலைக் கையாள்வதை கடினமாகவும் சவாலாகவும் உணர்வீர்கள். பணி நிமித்தமான பயணங்கள் சாத்தியம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
பணியை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். திறமையுடன் பணியாற்றுவீர்கள். இவையனைத்தும் உங்கள் சக பணியாளர்களின் கவனத்தை ஈர்க்கும். உங்களின் நேர்மையான செயல்திறன் உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்று சேமிக்க முடியும். அதனால் மிகுந்த திருப்தி உண்டாகும். இன்று முழு ஆரோக்கியம் காணப்படும். உங்களிடம் இன்று உறுதி காணப்படும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
உங்களிடம் காணப்படும் ஈகோ மனப்பான்மை உங்கள் துணையுடனான உறவை பாதிக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை தக்க வைக்க உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். சளி இருமல் போன்ற உபாதைகள் ஏற்படலாம்.