Advertisment

Rasi Palan 28th March 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 28th March 2020: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 28th March 2020

Rasi Palan 28th March 2020

Today Rasi Palan, 28th March 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 28th March 2020: இன்றைய ராசி பலன், மார்ச் 28, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

கிரகங்களின் சாதகமான பார்வையினால் நற்பலன்களை பெறுவீர்கள். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். சர்ச்சை விவகாரங்களிலும் சாதகமான பலன்கள் ஏற்படும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

கவலைகளை நினைத்து கலங்காதீர்கள், விரைவில் நல்லகாலம் பிறக்கும் என்று நம்பிக்கை கொள்வீர்கள். மற்றவர்களின் உதவியினால், நற்பலன்களை அடைவீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

எத்தகைய செயல்களை செய்தாலும் அதில் முழுக்கவனத்துடன் இருத்தல் நலம். தங்களது தவறுகளுக்கு மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தாதீர்கள். எதிர்காலத்தை நினைத்து மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

கிரகங்களின் சாதகமான பார்வையால், நற்பலன்கள் ஏற்படும். செய்யும் விஷயங்களில் வெற்றிக்கனியை ருசிப்பீர்கள். சுயமுயற்சியால் காரியங்களை சாதித்து மற்றவர்களின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

விருந்து, விசேஷங்களில் கலந்துகொள்வதால், மனம் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். இந்த வாழ்க்கையில், சுக துக்கங்களுக்கு எல்லை உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம். எச்சரிக்கையோடு காரியங்களை செய்துவந்தால், இழப்புகளை தவிர்க்கலாம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

தொண்டு உள்ளிட்ட மனிதாபிமான விசயங்களில் மனம் செல்லும். மற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவீர்கள். பணபரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

அதிக நேரம் உழைப்பீர்கள். மிகப்பெரிய வெகுமதி காத்திருக்கிறது. முன்னேற்றப் பாதைகளில் வீறுநடை போடப்போகிறீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற மனநிலையில் இருந்து முதலில் விடுபடுங்கள். மற்றவர்களின் ஆலோசனைகளினால், வெற்றி வாய்ப்பு கிட்டும். வார்த்தைகளில் நிதானம் அவசியம்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

நிதி விவகாரங்கள் சாதகமாக இருப்பதால், முதலீடுகளை விரிவுபடுத்துவீர்கள். பணபரிவர்த்தனைக்கு உகந்த நாள். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

கணவன் – மனைவி இடையே மனக்கசப்புகள் வந்து நீங்கும். விட்டுக்கொடுத்து செல்வதினால் மகிழ்ச்சியான நிலை ஏற்படும். குழந்தைகள் நலனில் அதிக அக்கறை செலுத்துவீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

மனக்குழப்பம் ஏற்படும், கிரகங்களின் சாதகமான பார்வையினால் விரைவில் அதிலிருந்து விடுபடுவீர்கள். உறவினர்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். வாகனபோக்குவரத்தில் அதிக கவனம் வேண்டும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

எடுத்த காரியங்களில் தாமதம் ஏற்படுகிறதே என்று கவலை கொள்வீர்கள். உற்றவர்களின் அனுசரணையினால், மனசஞ்சலத்தில் இருந்து விடுபடுவீர்கள். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment