Today rasi palan, rasi palan May 28th, இன்றைய ராசிபலன்
Today Rasi Palan, 28th May 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
Rasi Palan 28h May 2020: இன்றைய ராசி பலன், மே 28, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
Advertisment
Advertisements
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
தொழில் விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். எதிர்கால தேவைக்காக இப்போதே திட்டமிடுவீர்கள். பணவரவு மிகுந்த நாள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
பயணம் குறித்த முடிவுகளை தவிர்ப்பது நல்லது. புதிய விவகாரங்களில் தோல்வி அடைய வாய்ப்புண்டு. விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.
மற்றவர்களுக்காக தலைமையேற்பீர்கள். ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள், மகிழ்ச்சியான நாள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
கடந்தகால நினைவுகளை அசைபோட்டு மனவருத்தம் அடைவீர்கள். முக்கிய விசயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்வீர்கள். மற்றவர்களால் புரிந்துகொள்ள இயலாத நிலையில் இருப்பீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
குழந்தைகள், இளைய சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அதிகம் உணர்ச்சிவசப்பட வாய்ப்பு இருப்பதால் மனக்கட்டுப்பாடு அவசியம். புதுவித அணுமுறைகளை மேற்கொள்வீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
நடப்பவை நன்மைக்கே என்பதை உணர்வீர்கள். கிரகங்களின் சாதகமான பார்வையினால், எண்ணிய காரியங்கள் நினைத்தபடி ஈடேறும். செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
நிபுணர்களின் ஆலோசனையினால், முக்கிய விஷயங்களில் தீர்வு காண்பீர்கள். நடைமுறை சாத்தியமில்லாத விசயங்களை முடித்துக்காட்டுவீர்கள். மற்றவர்களை ஏளனமாக பார்ப்பதை தவிர்க்கவும்
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
நிதி விவகாரங்களில் அதிக கவனம் வேண்டும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மற்றவர்களின் அறிவுரைகளை ஏற்பீர்கள், மகிழ்ச்சியான நாள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
வழக்கு விசயங்களில் சாதகமான நிலை நிலவும், மற்றவர்களுக்காக வளைந்து கொடுக்க தயங்க வேண்டாம். முன்னெச்சரிக்கையுடன் இருப்பதால், விரயங்களை தவிர்க்கலாம்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
மனக்குழப்பங்களால் அவதிப்படுவீர்கள். எது கற்பனை எது நிஜம் என்பதில் இருவேறு கருத்து நிலவும். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை உணர்வீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
பொதுநலத்துடன் செயல்படுவீர்கள். மற்றவர்கள் தங்கள் கவலைகளை உங்களை சுமக்க வைப்பார்கள். அவர்களினால் ஏதாவது காரியம் நடக்கும் என்பதால் அதனை பொறுத்துக்கொள்வீர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil