Rasi Palan Today 28th November 2018 in Tamil : ராசி பலன் பார்த்து முடிவுகளை எடுக்கிற அன்பர்கள் பலர்! அதை, ‘ஜஸ்ட் லைக் தட்’ கடந்து செல்கிறவர்களும் உண்டு. எதுவானாலும் நல்ல விஷயங்களை ஊக்கமாகவும், அல்லாத விஷயங்களை எச்சரிக்கை கலந்த பாடமாகவும் எடுத்துக் கொண்டு நகர்வதே வாழ்க்கை. இந்தப் புரிதலுடன் இந்திய எக்ஸ்பிரஸ் தமிழ் இங்கு ராசி பலன் பகுதியை தருகிறது.
Rasi Palan 28th November 2018 : இன்றைய ராசி பலன், 28 நவம்பர் 2018
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
சம்பிரதாயத்துக்கு எந்த செயலையும் செய்ய வேண்டாம். முழு மனதோடு இறங்கி வேலைப் பாருங்கள். முடிவு சாதகமாக இல்லையென்றாலும், முயற்சி உங்களுக்கு அனுபவத்தை கொடுக்கும். சுமாரான நாள். முதுகு வலியால் சற்று அவதிப்படுவீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
உங்களின் விவேகமான செயல்பாடுகளால் முன்னேற்றம் காண்பீர்கள். யாருடைய சிபாரிசின் பேரிலும் வெற்றி காண மாட்டீர்கள். ஆனால், துடுக்குத்தனமான பேச்சைக் குறைத்துக் கொண்டால் நல்லது. பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
யாரும் உங்களை நிர்வகிக்க அனுமதிக்காதீர்கள். அது உங்களுக்கே ஆபத்தாக முடியலாம். நண்பர்களின் ஆலோசனைகள் சில சமயம் கைக் கொடுக்கும். தேவையில்லாத விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டாம்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
தவறு என்று சொன்னாலே தலைக்கு மேல் கோபம் வரும் உங்களுக்கு. அதேபோல், முடியாது என்று சொன்னாலும் டென்ஷன் ஆவீர்கள். சாதாரணமாக செய்ய வேண்டிய வேலையை, பரபரப்போடு செய்வதை நிறுத்தினால் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. வெற்றிகரமான நாள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
மறதியால் அவதிப்பட்டு வந்திருப்பீர்கள். அந்த மந்த நிலை சற்று மாறும். பிரச்சனைகளை கண்டு ஒதுங்க வேண்டும். முயன்றால், உங்களை நோக்கி வர வெற்றி காத்திருக்கிறது. ஆனால், முயற்சி செய்ய வேண்டும். குடும்பத்தோடு இனிமையான நேரத்தை செலவு செய்வீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
உடல் ஆரோக்யத்தில் அக்கறையின்றி இருப்பீர்கள். குறிப்பாக பெண்கள். கனிவான பேச்சுக்கள் உங்களுக்கு நண்பர்களை அதிகரிக்கும். உங்களை சுற்றி எப்போதும் யாராவது இருந்து கொண்டே இருப்பார்கள். வசீகரமான நாள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
வெளிநாடு செல்லும் யோகம் கிட்டும். பணி நிமித்தமாகவோ, படிக்கவோ செல்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். மரம் தொடர்பான தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
அடிப்படையில் சில பிரச்சனைகள் இருப்பதால், உங்களால் சில வெற்றிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். களைப்படைய வேண்டாம். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக உள்ளன.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
பணியிடத்தில் வரும் சங்கடங்களை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிச் செல்லுங்கள். உங்கள் மன நிம்மதிக்கு அதுதான் நல்லது. பிடிபடாத செயல்களை செய்து தோல்வியை தேடிச் செல்லாதீர்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
இரும்புத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டாகும். மாணவர்களின் கல்வித் தரம் உயரும். பணியிடங்களில் சில அசௌகரியமான நிகழ்வுகள் ஏற்படலாம்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
மருத்துவ செலவுகள் ஏற்படும் நாள். உடல் நலனில் முடிந்த அளவு அக்கறையாக இருக்க வேண்டியது கட்டாயம். கண் தொடர்பான பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. மழையில் நனைவதைக் கூட தவிர்த்தால் நல்லது.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
கேளிக்கைகளில் செலுத்தும் நாட்டத்தை உங்கள் பணிகளில் செலுத்துங்கள். கவனமாக இருக்க வேண்டிய காலக்கட்டங்கள் இது. அடுத்தக் கட்டத்தை நோக்கி முன்னேறும் எண்ணத்துடன் செயல்படுங்கள். சுமாரான நாள்.