Rasi Palan 29th December 2018: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 29th December 2018 in Tamil – தீவிரமான எதிர்ப்புகளையும் சாதாரணமாக கடந்து செல்வீர்கள்

Rasi Palan Today 29th December 2018, Today Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்
Rasi Palan Today 29th December 2018, Today Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 29th December 2018 in Tamil : இந்த உலகில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களும் இயற்கையின் சக்திக்கு உட்பட்டதே.  அதில் மனித இனமே அதிகளவில் ஆச்சர்யங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. வானிலை சாஸ்திரம், ஜோதிடம், ஜாதகம் என்று அவன் கண்டுபிடித்த ஆச்சர்யங்கள் பல. நமது தமிழ்.இந்தியன்எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம், உங்களுடைய தின பலனை தெரிந்து கொள்ளலாம். இன்று உங்களுக்கான ராசிபலன் இதோ,

Rasi Palan 29th December 2018 : இன்றைய ராசி பலன், 29 டிசம்பர் 2018

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

கல்வியில் அதிக ஈடுபாடு உண்டாகும். மாணவர்களின் படிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சிக்கலான சூழ்நிலைகளையும் திறம்பட சமாளிப்பீர்கள். குடும்ப உறவில் சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்படும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

இன்றைய நாளில் பெரும்பாலான உங்களது முயற்சிகள் வெற்றியில் முடியும். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அலைச்சல் குறையும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உடல் சோர்வாக காணப்படுவீர்கள். அது பணியின் நிமித்தம் உருவானது என்பதால், நிம்மதி அடையலாம். கல்வித் தரம் மேம்படும். செலவுகளை கட்டுப்படுத்த திட்டமிட்டு செயல்படுங்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

வெற்றி உங்களைத் தேடி வரும். அதனை அனுபவிப்பீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் உண்டாகும். சேமிப்பு கை கொடுக்கும். காதல் கைகூடும். குடும்ப உறவில் நிம்மதி நிலவும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

சவால் நிறைந்த பணிச் சூழலில் சிறப்பாக செயல்படுவீர்கள். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் விவாதத்தில் ஈடுபடுவீர்கள். அதில் வெற்றியும் பெறுவீர்கள். சூழ்நிலை பார்த்து காய்களை நகர்த்துவீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

பல தடைகளுக்குப் பின் சில நல்ல விஷயங்கள் உங்கள் மனதை குளிர்விக்க காத்திருக்கிறது. பணவரவுடன் செலவும் சேர்ந்து காணப்படும். சீரான நிதிநிலைமையில் தடுமாறினாலும் காப்பாற்றப்படுவீர்கள். திருமண தோஷம் விலகும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்று உகந்த நாள் அல்ல. பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது. ஏற்ற இறக்கங்களை காண்பீர்கள். அதேசமயம், முடிவு திருப்தியாக இருக்கும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

பணியில் சில இறுக்கமான சூழ்நிலை நிலவும். திறமையுடன் , விவேகமாக செயல்பட்டால் வெற்றியை வசப்படுத்தலாம். குடும்ப விஷயங்களில் நிலவிய குழப்பம் அகலும். அமைதியான அணுகுமுறையை கையாள்வது நல்லது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

அரசு வேலை கிடைக்க அமோக வாய்ப்புள்ளது. அரசுத் துறையில் உங்கள் முயற்சியை மேலும் அதிகப்படுத்துங்கள். பெரிய சர்பிரைஸ் காத்திருக்கிறது. எது தேவை, தேவையற்றது என பகுப்பாய்வு அவசியம்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

குழந்தை வளர்ப்பில் கவனம் அவசியம். நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். முடிவு எடுப்பதில் தெளிவாக இருங்கள். பணிச்சுமை அதிகரிக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

நேர்மறையான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள். பொறுப்புகளை திறமையாக கையாள்வதில் தடைகள் காணப்படும். உங்கள் குழந்தைகளின் மற்றும் குடும்பத்தின் வளர்ச்சி பற்றிய கவலை காணப்படும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

மகிழ்ச்சியான மனநிலையுடன் காணப்படுவீர்கள். ஆதரவு அதிகரிக்கும். தீவிரமான எதிர்ப்புகளையும் சாதாரணமாக கடந்து செல்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப உறவில் மீண்டும் நிம்மதி உருவாகும்.

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rasi palan 29th december

Next Story
Rasi Palan 28th December 2018: இன்றைய ராசிபலன்Rasi Palan Today 28th December 2018, Today Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com