Rasi Palan Today 29th March 2019 in Tamil: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 29th March 2019 : இன்றைய ராசி பலன், மார்ச் 29, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
உங்கள் வெற்றியை நோக்கி ஓட வேண்டிய நாள். தோல்விகளை திரும்பிப் பார்க்காமல் முன்னேறிச் செல்லுங்கள். களம் புதிதாக இருந்தாலும் துரிதமாக செயல்படுங்கள். வெற்றி உறுதி. குடும்ப உறவில் மேலும் அக்கறை வேண்டும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
நண்பர்களின் அறிவுரைகள் கைக்கொடுக்கும். வேலை தொடர்பாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிட்டும். மின் சாதனப் பொருட்களை வாங்குவீர்கள். கடன் குறையும். அதேசமயம், செலவுகளில் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
திருமண சுபயோகத்தை விரைவில் சந்திப்பீர்கள். மனைவியின் அன்பான வார்த்தைகள் உங்களை உற்சாகப்படுத்தும். தடுமாறிய உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெற்றி வசப்படும் நாள் இது.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உடல் நலனில் அக்கறை தேவை. அறிவுரைகளை கண்மூடித்தனமாக ஏற்காமல் சுய புத்தி கொண்டு ஆராய்ந்து செயல்படுங்கள். குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவழியுங்கள். தோல்விகளை கண்டு அஞ்ச வேண்டும். சில சறுக்கல்கள் உங்களை பலவீனப்படுத்த முயலும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
உடலை ஒருமுறை முழுவதும் பரிசோதனை செய்துவிடுங்கள். சில மருத்துவ செலவுகள் ஏற்படும் முன்னரே, அதை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் சிறியளவு பிரச்சனை வந்து போகும். சுமாரான நாள் உங்களுக்கு.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
கிரக அமைப்பு நிலைப்படி, இன்று தானம் வழங்குங்கள். உங்களின் ஆரோக்யமும், நிதி நிலைமையும் மேம்படும். திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், வாராவாரம் வெள்ளியன்று விரதம் இருப்பது பலன் தரும். பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்ளுங்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
முன்னேற்றம் உங்களை மகிழ்விக்கும். மேலதிகாரிகளுடன் நல்ல பெயரை பெறுவீர்கள். யாரையும் புண்படுத்த தெரியாத உங்களுக்கு இன்றைய நாளில் வெற்றி தேடி வரும். இன்பமான நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
சிலரை புரிந்து கொள்வது மிகக் கடினம். இன்றைய நாள் உங்களுக்கு அப்படியானதாக இருக்கப் போகிறது. எங்கிருந்து பிரச்சனை வருகிறது என்று தெரியாத அளவிற்கு இன்னல்கள் ஏற்படலாம். ஆனால், அவற்றை உங்கள் சாதுர்யத்தால் முறியடிப்பீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
இன்று உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும். கடினமான பணிகளைக் கூட எளிதாக குறித்த நேரத்திற்கு முன் முடிப்பீர்கள். இன்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யம் அளவிற்கு பணப்புழக்கம் காணப்படும். உங்கள் சேமிக்கும் திறன் அதிகரிக்கும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
வாழ்வில் உங்கள் பொறுப்புகள் அதிகமாகும். இது உங்களுக்கு சிறிது பதட்டத்தை ஏற்படுத்தும். குழப்பம் ஏற்படாதபடி தெளிவான இலக்குகளை அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்க பரிகாரம் மேற்கொள்ளவேண்டியிருக்கும். இறைவழிபாடு மற்றும் சிறப்பான திட்டம் மூலம் செலவுகளை கட்டுப்படுத்தலாம்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
இன்றைய நாள் அமைதியாக இருக்க பிரார்த்தனை மற்றும் தியானம் மேற்கொள்ளுங்கள். அதிக தண்ணீர் குடிப்பதும் எண்ணெய் பதார்த்தங்கள் தவிர்ப்பதும் உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஆரோக்கியத்தை கவனிக்காமல் விட்டால் தோல் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாள். இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். முக்கிய முடிவுகள் எடுக்க இது உகந்த நாள். இன்று நிதிநிலையில் நம்ப முடியாத அளவு பலன் இருக்கும். உங்கள் சொத்துக்கள் அதிகரிக்கும்.