Today rasi palan, rasi palan May 29th, இன்றைய ராசிபலன்
Today Rasi Palan, 29th May 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
Rasi Palan 29h May 2020: இன்றைய ராசி பலன், மே 29, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
Advertisment
Advertisements
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
பதறிய காரியம் சிதறும் என்பதை எத்தருணத்திலும் மறந்துவிடாதீர்கள். இடத்திற்கு தக்கவாறு தங்களை மாற்றியமைத்துக்கொள்வதனால் மட்டுமே, இவ்வுலகில் சாதிக்கலாம் என்பதை உணர்வீர்கள். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
புதிய உத்வேகத்துடன் செயல்களில் ஈடுபடுவீர்கள். சவால்களை முறியடித்து வெற்றி காண்பீர்கள். மறுக்கப்பட்ட உரிமைகளை திரும்ப பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
நிதி விவகாரங்களில் அதிக கவனம் வேண்டும். நிலையறிந்து செயல்படுவதனால் காலவிரயத்தை தவிர்க்கலாம்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
எதிர்பாராத திருப்பங்களை எதிர்கொள்வீர்கள். மற்றவர்களுக்கு உதவுவதனால், தக்க சமயத்தில் நமக்கு உதவிகள் கிடைக்கும் என்பதை உணர்வீர்கள். உணர்ச்சிவசப்படும் நிலை இருப்பதால், மனக்கட்டுப்பாட்டு பயிற்சிகளை மேற்கொள்ளவும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
பணியிடங்களில் அதிக பிஸியாக இருப்பீர்கள். அதிக பணிசு்சுமையால் அவதிப்படுவீர்கள். தவறுகளை திருத்திக்கொள்ள முற்படுவீர்கள். குறுக்குவழிகளில் முன்னேறுவதை தவிர்க்க வேண்டும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
இளைய சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இந்த நாள் இனிய நாள் என்பதை உணர்வீர்கள். மன அமைதிக்கு இசை கேட்டு மகிழ்வீர்கள். புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
முக்கியத்துவம் கருதி வீட்டில் பல முக்கிய மாற்றங்களை மேற்கொள்வீர்கள். முன்னுரிமைகளை நிறைவேற்ற பொருளாதார வசதியின்றி தத்தளிப்பீர்கள். நடக்குற நேரம்வந்தா எதுவும் தானா நடக்கும் என்பதை உணர்வீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
தேவையில்லாததை மனதில் போட்டு குழப்பிக்கொள்வீர்கள். செய்வனவற்றை திருந்த செய்ய முயல்வீர்கள். தவறு நேர்ந்தால் அதை உடனே சரிசெய்ய போராடுவீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
செலவு கட்டுப்பாடு இல்லாமல் போகும் வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையுடன் செலவு செய்வது நல்லது. மற்றவர்களுடன் நட்பு பாராட்டுவீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை கழிக்க முற்படுவீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
உத்வேகத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தேவையான உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். நிதிவிவகாரங்களில் நிலவிவந்த சுணக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். மனக்குழப்பங்களிலிருந்து நிம்மதி அடைவீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
என்ன செய்கிறோம், என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருப்பீர்கள். நான் யார் என்பதை உணர்வீர்கள். பிரியமானவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனம் அவசியம்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
திறமைகள் வெளிப்படும் நாள். மற்றவர்களால் அங்கீகரிக்கப்படுவீர்கள். நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். எதிர்காலத்திற்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil