Today Rasi Palan, 29th November 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
Rasi Palan 29th November 2019: இன்றைய ராசி பலன், நவம்பர் 29, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
Advertisment
Advertisements
ஞாபகமறதியால் பல்வேறு இழப்புகளை சந்திக்க வேண்டிவரும் என்பதால் விழிப்புடன் இருக்கவேண்டிய நாள். நிதி விவகாரங்களில் அதிக கவனம் வேண்டும். வார்த்தைகளில் நிதானம் அவசியம்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதனால், பாராட்டப்படுவீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உடல்நலத்தில் அக்கறை அவசியம். கிரகங்களின் சாதகமற்ற பார்வையினால் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்று என்ற நிலை இருக்கும். சுயநலத்துடன் இருப்பீர்கள்.
தர்பாரின் 'Chummakizhi' பாடல் ரஜினி ரசிகர்களை கவர்ந்ததா ?
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
பால்யகால நண்பரை சந்திப்பதால் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். தேவையற்ற விசயங்களில் தலையிடுவதனால் மனஅமைதி இழந்து காணப்படுவீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
கிரகங்கள் சாதகமான நிலையில் இருப்பதால், நினைத்த காரியங்கள் எண்ணியபடி ஈடேறும். மகிழ்ச்சியான நாள். மகிழ்ச்சியாக இருப்பதால், பிறரையும் மகிழ்விப்பீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
புதியனவற்றை கற்றுக்கொள்வதில் அதீத ஆர்வம் காட்டுவீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
மாற்றுக்கருத்து உடையவர்களிடமிருந்து விலகி இருத்தல் நலம். பணவரவு விவகாரங்களில் அதிருப்தி நிலவும். வழக்கமான பணிகளிலிருந்து விலகிச்செல்வீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
நன்மை நடைபெற நல்ல எண்ணங்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதை உணர்வீர்கள். உங்களது நடத்தைகள் மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றம் காணப்படும். நம்பிக்கை அதிகரிக்கும் நாள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
மனதில் நன்மை தோன்றினாலும், நடப்பது வேறு ஒன்றாக இருக்கும். மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், வார்த்தைகளில் நிதானம் அவசியம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
நண்பர்கள், உறவினர்கள் தக்கசமயத்தில் உதவுவார்கள். இலக்குகளை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
விழிப்புடன் இருந்து விரயங்களை தவிர்ப்பீர்கள். பணியிடத்தில் சக பணியாளர்களினால் தொல்லை ஏற்படலாம். கசப்பான சம்பவங்களை மறப்பதால் தான் மகிழ்ச்சி உண்டாகும் என்று முடிவு எடுப்பீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
பயணம் செல்வது தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். வாகன போக்குவரத்தில் அதிக கவனம் அவசியம்.