Today rasi palan, rasi palan May 23rd, இன்றைய ராசிபலன்
Today Rasi Palan, 29th October 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
Rasi Palan 29th October 2019: இன்றைய ராசி பலன், அக்டோபர் 29, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
வெற்றிகரமான நாள். வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு பல நாள் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த பாடங்கள் எளிதில் உள்வாங்கப்படும். குடும்ப உறவில் சிக்கல் நீங்கும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
மன அழுத்தம் குறையும். நண்பர்களின் உதவி கிடைக்கும். மருத்துவம் தொடர்பான செலவுகள் உண்டாக வாய்ப்புண்டு. குழந்தைகள் பரமாரிப்பில் கவனம் தேவை. மகிழ்ச்சியும், சிக்கலும் கலந்த நாள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
முன்னேற்றத்தை நோக்கி நகரும் மற்றொரு படிக்கல் இந்த நாள். குளிர் நீரில் குளிப்பதை தவிர்த்து, சுடு நீரில் குளித்தால் நல்லது. கடன்கள் வசூலாகும். மனைவியின் ஆதரவு கிடைக்கும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உடல் பிணி குணமாகும். ஆலை உலுக்கிப் போடும் அளவிற்கு காய்ச்சல் அடித்தாலும், பயப்படும்படி ஒன்றுமிருக்காது. காலை விநாயகரை வணங்கிவிட்டு பணிகளை துவக்கினால் பலன் தரும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
ஏழு கடலை தாண்டிய உற்சாகம் உண்டாகும். கடினமான பணிகளையும் ஜஸ்ட் லைக் தட் என்று கடந்து செல்வீர்கள். காதல் கைக்கூடும். திருமண உறவு தித்திக்கும். திருப்தியான நாள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
உடல்நலனில் அக்கறை வேண்டும். வீட்டுக்கு அருகில் உள்ள ஏதாவதொரு கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்லது. உணவில் கட்டுப்பாடு தேவை. கவனமாக இருக்க வேண்டிய நாள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
விலாவாரியாக எல்லாவற்றையும் விளக்கிக் கொண்டிருக்காமல், உங்கள் பணியை மட்டும் கவனியுங்கள். அரசுப் பணிகளுக்கு தயார் ஆகுபவர்கள், இன்று மறக்காமல் சிறிது நேரமாவது படித்தால் நல்லது. வெற்றி வந்து சேரும் நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
நண்பர்களின் ஆலோசனைக் கேட்டு நடக்க வேண்டும். திட்டம் போட்டு செலவுகளை சமாளியுங்கள். ஆடம்பரத்தை சற்று ஒதுக்கி வையுங்கள். எண்ணெய் சார்ந்த பலகாரங்களை இன்று ஒதுக்கினால் நல்லது.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
பொய் சொல்வதை தவிர்க்கவும். கிரகங்கள் உங்களுக்கு எதிராக இருப்பதால், சிக்கலில் மாட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. வாயுப் பிரச்சனை அதிகமாகும். அமைதியை கடைபிடியுங்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
வெளிநாடு வாய்ப்பு தொடர்ந்து நீடிக்கிறது. காதலில் நல்ல பதிலை எதிர்பார்க்கலாம். வெற்றி எனும் தேவதை இன்று உங்களுடன் இருக்க விரும்புகிறாள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
செலவு கையைச் சுடும். உங்கள் திறமையான நிர்வாகத்தால் அதனை சமாளிப்பீர்கள். முப்பாட்டன் முருகனை மனதில் நினைத்து காரியங்களில் ஈடுபடுங்கள். வெற்றி நிச்சயம்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
பழைய உடையை இன்று உடுத்த வேண்டாம். திருமணம் தொடர்பான தேடுதல் படலத்தில் நல்ல செய்தி கிடைக்கும். உடல்நலம் மேலோங்கும். சிக்கல்கள் குறையும்.