ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 29th October 2020: இன்றைய ராசி பலன், அக்டோபர் 29, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
வேறு கிரகங்களில் மனிதர்கள் வசிப்பதற்கு சாத்தியம் குறித்து பேசப்படுகிறது. இது ஒரு புதிய யோசனை என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில், இது பல நூற்றாண்டுகளாக விவாதிக்கப்படுகிறது. 13ம் நூற்றாண்டில், கிறிஸ்தவ தேவாலயம் உண்மையில் மக்கள் வசிக்கும் வேறு கிரகங்கள் மீதான நம்பிக்கையை அறிவித்தது. சாத்தியம் இல்லையெனில், கடவுளின் விருப்பப்படி அவர் அதை செய்ய மறுத்துவிட்டார்.
மேஷம் (மார்ச் 21 - ஏப்ரல் 20)
நீங்கள் அமைதியாக சிந்தனை செய்வதற்கு சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். தற்போதைய நண்பர்களின் கூட்டால், நீங்கள் முன்னுக்கு வர வேண்டுமானால், உங்கள் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய பிரதிபலிப்புகள் மிக முக்கியமானதாக இருக்கும். ஒரு நண்பர் அவருடைய இயல்பை மீறி நடந்து கொண்டால் கவலைப்பட வேண்டாம். அது சரியான நேரத்தில் கடந்து செல்லும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 - மே 21)
உங்கள் பக்கம் தவறு இல்லாவிட்டால் நீங்கள் சமரசம் செய்துகொள்ள விரும்புவதில்லை. அதை எதிர்கொள்ளுங்கள். நீங்கள் மரியாதைக்குரியவராகவும், நுண்ணுணர்வு மிக்கவராகவும், சில நேரம் உதவி செய்யத் தயாராக இருப்பீர்கள். ஆனால், சில சமயங்களில் மற்றவர்கள் விளைவுகளை எதிர்கொள்ளாமல் அவர்கள் உங்கள் மீது சவாரி செய்ய முடியாது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்! நீங்கள் நினைவில் கொள்ளுங்கள், மற்றவர்களின் உணர்வுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
மிதுனம் (மே 22 - ஜூன் 21)
உங்களுடைய உணர்ச்சி வெடிப்புகளால் கடுமையான ஆபத்து இருந்தாலும், இது உங்கள் வாழ்க்கையின் மிகவும் சாதகமான பகுதியாக இருக்க வேண்டும். உங்கள் உடல் தகுதி மற்றும் சக்தியின் அளவைப் பற்றி நீங்கள் கவலைப்படலாம். ஆனால், இந்த விஷயத்தில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். சிறந்த ஆலோசனையைப் பெறுங்கள்.
கடகம் (ஜூன் 22 - ஜூலை 23)
உங்கள் ராசியில் தொடர்ச்சியாக கிரகங்கள் ஆர்வம், சாகசம் மற்றும் காதல் ஆகியவற்றில் கவனத்தை ஈர்க்கின்றன. முடிவு மிகவும் தெளிவாகத் தெரிகிறது: நடக்கும் அனைத்தும் உணர்ச்சி பரவசத்திற்கான உங்கள் ஆழ்ந்த ஆசை மூலம் பிரதிபலிக்கும். இதான் கருத்தியல். உண்மையான விளைவுகள் வேறுபட்டிருக்கலாம்!
சிம்மம் (ஜூலை 24 - ஆக. 23)
நீங்கள் வீட்டை விட்டு வெளியேறுவதா? அல்லது ஒரு நண்பரை வெளியேற்றுவதா? அல்லது தளபாடங்களை மாற்றுவதற்கு நேரத்தை செலவிடுவதா என்று பார்ப்பது கடினம். ஒரு வழியா அல்லது மறு வழியா என நீங்கள் உணர்ச்சியின் அழுத்தத்துக்கு ஆட்பட நேரிடும். உங்களைப் புரிந்துகொள்பர்வகளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்!
கன்னி (ஆகஸ்ட் 24 - செப்டம்பர் 23)
உங்களுடைய ஒரு நட்பு முடிவுக்கு வந்தாலும், குறைந்தபட்சம் உங்கள் நினைவுகளை உறுதிப்படுத்த நீங்கள் ஓய்வு நேரத்தை செலவிடலாம். முற்றிலும் பொருளாதார அளவில், நீங்கள் ஒரு நிலையான காலக்கெடுவை எதிர்கொள்ளாவிட்டால், நிதி மற்றும் வணிகத் திட்டங்களை நகர்த்த அனுமதிக்கலாம்.
துலாம் (செப்டம்பர் 24 - அக்டோபர் 23)
உங்கள் தினசரி நட்சத்திரங்கள் நீங்கள் வேலையைத் தொடர வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கின்றன. ஆனால், உங்கள் வாராந்திர மற்றும் மாதாந்திர நட்சட்திர சுழற்சி இது சாத்தியமற்றது என்பதை வெளிப்படுத்துகின்றன. வாழ்க்கை வழக்கம் போல் சிக்கலானது. உங்கள் நண்பர்கள், கூட்டாளிகள், அன்புக்குரியவர்கள் அனைவரும் அவசரநிலையை உருவாக்க வாய்ப்புள்ளது. இது உங்களை நிச்சயமாக தூக்கி எறியும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 - நவம்பர் 22)
உங்கள் முக்கிய பலங்களில் ஒன்று, ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையில் ஒட்டிக்கொள்கிற உங்கள் திறமையாகும். சிலர் அதை பிடிவாதம் என்று அழைக்கிறார்கள். ஆனால், உங்களுடைய இதயபூர்வமான இலக்கை அடைய தேவைப்படுவது அதுதான். மற்றவர்கள் உங்கள் கனவுகளைப் பார்த்து சிரித்தால், அது அவர்களின் பிரச்சினை!
தனுசு (நவம்பர் 23 - டிசம்பர் 22)
நீங்கள் விரும்பியதைப் பெற்றாலும் பெறாவிட்டாலும் நெருங்கிய நண்பர் அல்லது உறவினரால் நீங்கள் எரிச்சலடைவீர்கள். அக்கரைப் பச்சை என்ற எண்ணத்தால் நீங்கள் கலக்கப்படுவீர்கள். ஒரு கூட்டாளி எளிதாக சவாரி செய்கிறார் என்று நம்புகிறார். ஆனால், உண்மை என்னவென்றால், நீங்கள் ஒரு ஒப்பந்தத்தில் சிறப்பானதை பெற்றிருக்கலாம். நீங்கள் இன்னும் கொஞ்சம் சகிப்புத்தன்மையுடன் இருங்கள்!
மகரம் (டிசம்பர் 23 - ஜனவரி 20)
நீங்கள் முடிவுகளை எடுத்துவிட்டு விவாதங்களை நடத்தலாம். கருத்துப் பரிமாற்றம் செய்வது முக்கியம். ஏனென்றால், ஒரு சிறிய புத்திசாலித்தனமான உரையாடல் அன்றைய பொது உணர்ச்சி கொந்தளிப்பை உடைப்பதற்கு உதவும் ஒரு மெல்லிய வாய்ப்பு உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் முயற்சி செய்வதுதான்.
கும்பம் (ஜனவரி 31 - பிப்ரவரி 19)
நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த அறிவில் நீங்கள் இங்கேயும் அங்கேயும் சில அபாயங்களை சந்திக்கக் கூடும். பழைய கசப்புகள் தீர வேலையில் நேர்மறையான கோணம் வழங்கப்படும்.
மீனம் (பிப்ரவரி 20 - மார்ச் 20)
ஜீவிப்பதற்கான உங்கள் திறமை, நீங்கள் கடினமான சூழ்நிலைகளில் முன்னேறி வந்தது உங்கள் திறனை அடிப்படையாக வைத்துதான் என்பதை நண்பர்களும் அறிவார்கள். நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள், வாய்ப்புகளை தேர்ந்தெடுக்காதீர்கள்.
key words: Today rasi palan, rasi palan october 29th, இன்றைய ராசிபலன்
Excerpt: rasi palan 29th October 2020 rasi palan today - இன்றைய ராசிபலன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.